மனித குலத்தின் வழிகாட்டி, முன்மாதிரி.....

மனித குலத்தின் தலைவர், அழகிய முன்மாதிரி.

"மிகச் சிறந்த தத்துவக் கோட்பாடோ,உயர்ந்த கல்வியோ உங்களுக்கு ஒரு போதும் நேர்வழியை நல்காது.வெற்றியையும் பெற்றுத் தராது.நேர்வழியையும்,வெற்றியையும் தரவேண்டும் என்றால் அந்த கோட்பாடுகளுக்குப் பின்னணியில் ஓர் ஆளுமை அடித்தளமாக அமைந்து செயல்பட்டிருக்க வேண்டும்.அப்பொழுதுதான் அதன்பால் நம்முடைய கவனம்,பார்வை,நேசம்,பாசம் போன்றவை குவியும்"

உங்களுக்கெல்லாம் அந்த மாதிரியான ஆளுமை யார் என்றுதெரியுமா???

அவர்தான் 

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்.

" அண்ணலார் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை ஒரு முஸ்லீமுக்கு முழுமையான முன்மாதிரி என்கிறது இஸ்லாம்.அப்படியானால் அவரது வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளும் அனைவருக்கும் தெரிந்தாக வேண்டும்.அனைவருக்கும் முன்பாகவும் அவரது வாழ்க்கை திறந்தே வைக்கப்பட்டுள்ளது.அவரது வாழ்க்கையின் எந்தவொரு பகுதியும் மறைவாகவோ மூடி மறைந்தோ இல்லை.ஒரு நிகழ்வு கூட விடுபடவில்லை.நிகழ்ந்தன யாவும் வரலாற்றின் பக்கங்களில் உள்ளன.ஒருவரது வாழ்க்கை முழுமையாக குற்றங் குறைகள் அற்றதாக,மாசற்றதாக உள்ளது என்பதை அறிய இதுவொன்றுதான் ஒற்றை வழிமுறை.இப்படிப்பட்ட வாழ்க்கைதான் உண்மையிலேயே மனிதனுக்கான எடுத்துக்காட்டு வாழ்வாக நின்று என்றென்றும் ஒளிர முடியும்!! "

"மிகச் சிறந்த தத்துவக் கோட்பாடோ,உயர்ந்த கல்வியோ உங்களுக்கு ஒரு போதும் நேர்வழியை நல்காது.வெற்றியையும் பெற்றுத் தராது.நேர்வழியையும்,வெற்றியையும் தரவேண்டும் என்றால் அந்த கோட்பாடுகளுக்குப் பின்னணியில் ஓர் ஆளுமை அடித்தளமாக அமைந்து செயல்பட்டிருக்க வேண்டும்.அப்பொழுதுதான் அதன்பால் நம்முடைய கவனம்,பார்வை,நேசம்,பாசம் போன்றவை குவியும்"

" (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை."

(அல்குர்ஆன் : 21:107)

முஹம்மது ரசூல்(ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வரலாறானது சமூகத்தில் காணப்படும் மனித இயல்போடு கலந்த,எல்லாப் பகுதிகளையும் உள்ளடக்கிய,பூரணத்துவமிக்கதொரு வரலாறாகும்.

அது நபி(ஸல்) அவர்களை ஒவ்வோர் அழைப்பாளனும்,தலைவனும்,தந்தையும்,கணவனும்,நண்பனும்,பயிற்றுவிப்பாளனும்,அரசியல்வாதியும்,நாட்டுத் தலைவனும்,ஒவ்வொரு சமூக அங்கத்தவரும் சிறந்த முன்மாதிரியாக ஏற்றுப் பின்பற்ற வேண்டிய ஒருவராக அடையாளமிட்டுக் காட்டியது.

அந்த மனித குலத் தலைவரின் சமத்துவமான போதனைகள் என்றென்றும் நிலைத்திருப்பவை. இன்று உலகம் முழுக்க இனத்தாலும்,நிறத்தாலும்,மதங்களாலும்,சாதிகளாலும் மனிதர்கள் சக மனிதர்களின் மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கக் கூடிய நேரத்தில் நாம் அனைவரும் உரத்தி பிடிக்க வேண்டியது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொன்ன உலகின் முக்கியமான மனித உரிமை பிரகடனத்தைத்தான்.இதோ அந்த பிரகடனம்.....

" மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். "
-முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்.

#ஹுப்புர்ரஸுல்❤❤
#உஸ்வத்துர்ரஸுல்💚💚💚

Comments

Popular posts from this blog

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

வஸதிய்யா

ஹஜ்.