" முஸ்லிம் " ஒரு இஸ்லாமியப் பார்வை.....

முஸ்லிம்...

இஸ்லாம் என்றால் கீழ்படிதல் என்று பொருள்.அதற்கு இன்னொரு அர்த்தமும் அரபு மொழியில் இருக்கிறது.அதன் பெயர் அமைதி.அதாவது இஸ்லாமிய மதத்தின் உயிர்க் கொள்கையான ஒரே இறைவனை வணங்கி அந்த இறைவன் சொல்லும் அனைத்திற்கும் கீழ்படிந்து நடப்பவர்களுக்கு முஸ்லிம் என்று பெயர்.

முஸ்லிம் என்ற சொல் அரபு மொழியில் இறைவனிடம் அடைக்கலம் பெற்றவன் என்றும், இறைவனிடம் சரணடைந்தவன் என்றும் பொருள் தரும்.முஸ்லிம் என்றால் கீழ்படிபவன் என்று பொருள்.அதேபோல் யார் இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களே முஸ்லிம்கள் எனப்படுவர்.ஒரு தொப்பியோ தாடியோ வைப்பதனாலோ அல்லது அரபியிலோ உருது மொழியிலோ பெயர் வைப்பதனாலோ யாரும் முஸ்லிம் ஆகி விட முடியாது.

இறைவன் குர்ஆனில் இப்ராஹீம் (அலை) நபியின் வரலாற்றின் வழியே இவ்வாறு கூறுகின்றான் : 

" எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக; எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப்பாயாக; நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக; எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய். "

(அல்குர்ஆன் : 2:128)

இஸ்லாமிய கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அதற்காக உழைத்தல் ஒவ்வொரு முஸ்லிமின் கட்டாயக் கடமையாகும்.இன்று உலகம் முழுக்க பெரும்பாலும் ஒரு மனிதன் தன்னை முஸ்லிம் என காட்டிக் கொள்ள அச்சப்படும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.இஸ்லாமிய வெறுப்புத் தொழிலின்(இஸ்லாமோஃபோபியா) காரணமாக இஸ்லாமிய அடையாளங்களுடன் அது பெயராக இருந்தாலும் கூட சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் சூழ்நிலை உருவாகி விட்டிருக்கிறது.

ஆனால் ஒரு மனிதன் உண்மையிலேயே தன்னை முஸ்லிமாக உணர்ந்து செயல்பட ஆரம்பித்து விட்டால் அந்த மனிதன் இந்த மனித சமூகத்திற்கு இன்றியமையாதவனாகின்றான்.இது குறித்து குர்ஆன் இப்படி பேசுகின்றது.

" நபியே நீர் கூறுவீராக,இது தான் என்னுடைய பாதை. நான் அல்லாஹ்வின் பாதையில் தெளிவில் இருந்து கொண்டு அழைக்கிறேன் ”

(அல் யூஸுப் :108)

முஸ்லிம் எனப்படுபவர்களுக்கான சிறந்த விளக்கம் இதுதான்,

“மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சமுதாயத்தர்களிலெல்லாம் மிக்க மேலான சமுதாயமாக நீங்கள் இருக்கின்றீர்கள். (ஏனெனில்) நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகிறீர்கள். தீமையை விட்டும் அவர்களை தடுக்கிறீர்கள்.”

(ஆலுஇம்ரான்:110)

தொடர்ந்து இன்னொரு வசனத்தில்.....

" இவர்கள் (எத்தகையவரென்றால்,) தங்களுடைய இறைவன் அல்லாஹ்தான் என்று கூறியதற்காக நியாயமின்றி தங்கள்  வீடுகளிலிருந்து எதிரிகளால் துரத்தப்பட்டார்கள். மனிதர்களில் (அநியாயம் செய்யும்) சிலரை, சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காத வரையில் கிறிஸ்தவர்களின் ஆலயங்களும், அவர்களுடைய மடங்களும், யூதர்களுடைய ஆலயங்களும், அல்லாஹ்வுடைய திருப்பெயர் அதிகமாக நினைவு செய்யப்படும் பள்ளிவாசல்களும் அழிக்கப்பட்டே போயிருக்கும். அல்லாஹ்வுக்கு யார் உதவி செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக அல்லாஹ்வும் உதவி செய்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் மிகப் பலவானும், அனைவரையும் மிகைத்தவனாகவும் இருக்கின்றான்."

(அல்குர்ஆன் : 22:40)

ஆக, முஸ்லிம் என்கிற சொல்லின் பொருள் அர்ப்பணமானவன் என்பதாகும். இந்த சொல்லாடலின் மீது அவன் பரிபூரண நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.மெத்தனத்தில் மூழ்கி செயற்களத்தை விட்டு விலகி இருத்தல் என்பது இறை நம்பிக்கையாளர்களுக்கு ஒவ்வாத நடைமுறையாகும். இஸ்லாமிய நலனைவிட தனி மனிதனுக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது. இடைவிடாத செயல்பாடுகளின் காரணமாக தோன்றினாலும் கூட சலிப்பு தட்டி விட கூடாது,அது குற்றமாகும்.ஏனெனில் எந்த ஒரு செயலும் அல்லாஹ்வின் இறுதி விசாரணை நாளான கியாமத்தில் சாதகமான சாட்சிகளாக அவை முன் நிற்கவே செய்திடும். சமூகத்திற்கு நான் இன்றியமையாதவன் என்கிற எண்ணம் ஒவ்வொரு ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.அதே நேரத்தில் அந்த எண்ணம் அகம்பாவமாக மாறிடல் ஆடாது.செயற்களத்தை நோக்கி இறைநம்பிக்கையாளன் எந்நேரமும் எதிர்பார்த்து காத்திருத்தல் வேண்டும்.


அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் நம் அனைவரையும் முஸ்லிமாகவே வாழ்ந்து அவனுடைய பாதையில் முஸ்லிமாகவே மரணிக்கச் செய்வானாக!!

Comments

Popular posts from this blog

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

வஸதிய்யா

ஹஜ்.