Posts

Showing posts from October 3, 2021

மனித குலத்தின் வழிகாட்டி, முன்மாதிரி.....

Image
மனித குலத்தின் தலைவர், அழகிய முன்மாதிரி. "மிகச் சிறந்த தத்துவக் கோட்பாடோ,உயர்ந்த கல்வியோ உங்களுக்கு ஒரு போதும் நேர்வழியை நல்காது.வெற்றியையும் பெற்றுத் தராது.நேர்வழியையும்,வெற்றியையும் தரவேண்டும் என்றால் அந்த கோட்பாடுகளுக்குப் பின்னணியில் ஓர் ஆளுமை அடித்தளமாக அமைந்து செயல்பட்டிருக்க வேண்டும்.அப்பொழுதுதான் அதன்பால் நம்முடைய கவனம்,பார்வை,நேசம்,பாசம் போன்றவை குவியும்" உங்களுக்கெல்லாம் அந்த மாதிரியான ஆளுமை யார் என்றுதெரியுமா??? அவர்தான்  முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம். " அண்ணலார் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை ஒரு முஸ்லீமுக்கு முழுமையான முன்மாதிரி என்கிறது இஸ்லாம்.அப்படியானால் அவரது வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளும் அனைவருக்கும் தெரிந்தாக வேண்டும்.அனைவருக்கும் முன்பாகவும் அவரது வாழ்க்கை திறந்தே வைக்கப்பட்டுள்ளது.அவரது வாழ்க்கையின் எந்தவொரு பகுதியும் மறைவாகவோ மூடி மறைந்தோ இல்லை.ஒரு நிகழ்வு கூட விடுபடவில்லை.நிகழ்ந்தன யாவும் வரலாற்றின் பக்கங்களில் உள்ளன.ஒருவரது வாழ்க்கை முழுமையாக குற்றங் குறைகள் அற்றதாக,மாசற்றதாக உள்ளது என்பதை அறிய இதுவொன்றுதான் ஒற்றை வழிமுற

இந்திய முஸ்லிம்கள்......

Image
இஸ்லாம் கொள்கை இலக்கு இயக்கம்!! இந்திய தேசத்தில் இஸ்லாமிய மார்க்கத்தை கொள்கையாக ஏற்றுக் கொண்ட மக்கள் கிட்டத்தட்ட 25 கோடிக்கும் அதிகமாக வாழ்கிறார்கள்.இந்தியாவின் இரண்டாவது பெரிய மக்கள் திரள் முஸ்லிம்கள். இந்திய சுதந்திரத்திற்கு பின்னரான காலகட்டத்தில் அரசின் அனைத்து துறை ரீதியாகவும் புறக்கணிக்கப்படும் சமூகமாக இஸ்லாமிய சமூகம் உள்ளது.குறிப்பாக 1990களின் காலகட்டங்களுக்குப் பிறகு உலகமயமாக்கலும்,தனியார்மயமாக்கலும் தாராளமாக இங்கே அனுமதிக்கப்பட்ட சமயத்தில் சுதந்திரத்திற்கு முன்பும் பின்புமாக இஸ்லாமிய சமூகத்தை அச்சுறுத்தும்  ஹிந்துத்துவப் பாசிசம் தனது புதிய உச்சத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.இத்தகைய சூழலில் இந்தச் சமூகத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு அமைக்கப்பட்ட நீதிபதி சச்சார் கமிட்டியின் அறிக்கை வெளிவந்தது. அந்த அறிக்கையில் சச்சார் அவர்கள் இஸ்லாமிய சமூகத்தை மேம்படுத்த மூன்று பிரதான விடயங்களில் கவனம் செலுத்துமாறு அரசுக்கு பரிந்துரை செய்தார்.அவை  1.இஸ்லாமிய சமூகத்தின் அடையாளங்களை(Identity) பாதுகாக்க வேண்டும். 2.இஸ்லாமிய மக்களுக்கு பாரபட்சம் காட்டாமல் அனைத்து ரீதியா

" முஸ்லிம் " ஒரு இஸ்லாமியப் பார்வை.....

Image
முஸ்லிம்... இஸ்லாம் என்றால் கீழ்படிதல் என்று பொருள்.அதற்கு இன்னொரு அர்த்தமும் அரபு மொழியில் இருக்கிறது.அதன் பெயர் அமைதி.அதாவது இஸ்லாமிய மதத்தின் உயிர்க் கொள்கையான ஒரே இறைவனை வணங்கி அந்த இறைவன் சொல்லும் அனைத்திற்கும் கீழ்படிந்து நடப்பவர்களுக்கு முஸ்லிம் என்று பெயர். முஸ்லிம் என்ற சொல் அரபு மொழியில் இறைவனிடம் அடைக்கலம் பெற்றவன் என்றும், இறைவனிடம் சரணடைந்தவன் என்றும் பொருள் தரும்.முஸ்லிம் என்றால் கீழ்படிபவன் என்று பொருள்.அதேபோல் யார் இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களே முஸ்லிம்கள் எனப்படுவர்.ஒரு தொப்பியோ தாடியோ வைப்பதனாலோ அல்லது அரபியிலோ உருது மொழியிலோ பெயர் வைப்பதனாலோ யாரும் முஸ்லிம் ஆகி விட முடியாது. இறைவன் குர்ஆனில் இப்ராஹீம் (அலை) நபியின் வரலாற்றின் வழியே இவ்வாறு கூறுகின்றான் :  " எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக; எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப்பாயாக; நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக; எங்களை(க் கருணையுடன் நோ

வேர்கள் (Roots)

Image
ஏழு தலைமுறையின் பூர்வீகம் நோக்கிய மாபெரும் பயணம்..... அமெரிக்க கண்டத்தின் பூர்வகுடிகளான செவ்விந்திய மக்களை இனஅழிப்பு செய்து அங்கே ஆக்கிரமிப்பை அரங்கேற்றி நிலங்களை கைப்பற்றியது பிரிட்டிஷ் அரசு.அதேபோல் அன்றைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் தவிர பிற ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ்,போர்ச்சுகல்,ஸ்பெயின் போன்ற நாடுகளும் தங்கள் பங்கிற்கு செவ்விந்தியர்களை அழித்து அவர்களின் பூர்வீக பகுதியில் தங்கள் தேச மக்களை குடியமர்த்தினர். பிரிட்டிஷ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தங்கள் மக்களை குடியமர்த்திய பின்னர்,செவ்விந்திய மக்களிடம் அபகரித்த வளம் மிகுந்த நிலங்களில் பணியாற்ற ஆப்பிரிக்க கண்டங்களில் இருந்து கடத்தி வந்து அன்றைய அமெரிக்காவின் அடிமைச் சந்தைகளில் அடிமைகளாக விற்கப்பட்ட கறுப்பின மக்களின் துயரம் தோய்ந்த வரலாற்றைப் பேசுகிறது வேர்கள் என்னும் இந்த நூல்.ஏழு தலைமுறைகளுக்கு முன்னால் ஆப்பிரிக்காவிலிருந்து கடத்தி வரப்பட்டு அடிமையாக்கப்பட்ட தன்னுடைய முப்பாட்டனின் முப்பாட்டனுடைய வேர்களை கண்டறிய முற்பட்ட ஒரு மாபெரும் மனித சாகசமே இந்த புத்தகம். காம்பியாவின் இயற்கையான சூழலில் இருக்கும் அழகான இஸ்லாமிய கிராமமான ஜுஃ

உடற்பலம்...!

Image
இஸ்லாம் கூறும் உடற்பலமும் தனிமனிதனும்! ஆரோக்கியமான உடல் மிகப்பெரும் ஒரு அருளாகும்.இதனை அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு வழங்குகின்றான்.உடல் நோயற்று ஆரோக்கியமாக இருப்பதுடன், உடல் பலமாகவும் இருத்தல் அவசியமானது என்பது இதன் கருத்தாகும். உண்மையில் உடல் பலத்தை காட்ட கூடிய முக்கியமான அடையாளங்களில் நோயற்ற உடலும் ஒன்றாகும்.ஆரோக்கியமான உடல் கொண்டவர்களால் தான் தொடர்ந்தாற் போல் உழைக்கவும்,இபாதத்களை முழுமையாக நிறைவேற்றவும் முடியும். தனிமனித உருவாக்க முயற்சிகளில் மற்றொரு முக்கியமான செயல் உடல் பலம் உள்ள மனிதர்களை உருவாக்குவது.இஸ்லாம் எதிர்பார்க்கும் தனிமனிதன் பலமான உடல் கொண்டவனாக இருக்க வேண்டும்.ஏனெனில், அவனிடத்தில் இஸ்லாம் எதிர்பார்க்கும் பணிகளும் கடமைகளும் இத்தகைய ஒரு பண்பை அவனிடத்தில் வேண்டி நிற்கின்றன.அந்த வகையில் ஒரு மனிதனின் உருவாக்கம் முழுமை பெறவும்,சமநிலை பேணவும் உடற்பலம் என்னும் விஷயத்திலும் போதிய கவனம் செலுத்த வேண்டும்.எனவே தனிமனித உருவாக்க செயற்பாட்டில் உடல் பலம் எனும் கருதுகோள் மிக மிக முக்கியமானது. நபியவர்கள் கூறுகின்றார்கள்,  " பலவீனமான முஃமினை(நம்பிக்கையாளர்) விட பலமான முஃ

உரிமைக்கான போராட்டங்கள்.....

Image
உரிமை,சுதந்திரம்,பாதுகாப்பு.... ஒரு சமூகம் தன் மீது மேற்கொள்ளப்படும் நெருக்கடிகள்,முற்றுகைகளுக்கெதிராக செயல்படுதல் என்பது மிக இன்றியமையாத ஒன்று.மனித சமூகத்தின் இயல்பான குணங்கங்களில் ஒன்று,மறுக்கப்படும் தன்னுடைய உரிமைகளுக்காக போராட்டத்தை மேற்கொள்வது ஆகும். உரிமைப் போராட்டம்,பாதுகாப்பு,நீதி,மனித சமத்துவம் ஆகிய சமூக குணங்கள் தானாக உருவாகுபவை.தொடர்ந்து முயற்சிகள் தேவைப்படும் துறைகள் அவை.சட்டங்களும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அமைப்புகளும் அதற்குத் தேவை.தீமைகள் நிறைந்த நிலைகளைக் காணும் போது குரல் எழுப்ப வேண்டும்.சமூகத்தைப் போராட்டங்கள் ஆட்டம் காண வைக்க வேண்டும். நீதி இயற்கையானது அது போல சுயநலமும் இயற்கையானதே.இவற்றிற்கிடையேயான மோதல் தனிநபர் வாழ்விலும்,குடும்ப வாழ்விலும்,சமூக வாழ்விலும் இயல்பாகவே ஏற்படும்.சொத்துக்களையும்,வாழ்க்கை வசதிகளையும் கைப்பற்றுவதற்கான ஆவேசம் மனித உள்ளங்களில் அதிகரித்து விட்டது.சுயநலம் தீவிரமடையும் போது சகவாழ்வு என்பது சிலருக்கு ஏற்றுக் கொள்ள முடியாததாக மாறிவிடும். சமூகத்தின் நீடித்த வாழ்விற்கு பாதுகாப்பு அத்தியாவசியமானது என்றாலும்,சமூகத்தில் அதற்கு எதிரிகள