Posts

Showing posts with the label பூமி தண்ணீர் இஸ்லாம்

பூமி என்னும் உயிர் கிரகம்-3

Image
தண்ணீர் மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது, தண்ணீர். மனிதன் மட்டுமல்ல, நீர் இல்லாமல் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. நாம் பல நாட்கள் உணவு உண்ணாமல் உயிர் வாழ முடியும். ஆனால் ஒரே ஒருநாள் முழுவதும் தண்ணீர் குடிக்காவிட்டால் உடல் ‘செல்கள்’ வற்றி உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகக்கூடும்.மனிதர்கள் உண்ணும் உணவிலிருந்து அவனுடைய தினசரி நடவடிக்கைகளுக்கு தண்ணீர் என்பது மிக இன்றியமையாதது. தண்ணீர் என்பது இஸ்லாத்தைப் பொருத்தவரை இறைவனிடம் இருந்து வருகிற அருட்கொடையாகும். இறைவனைத் தவிர வேறு யாராலும் ஒரு சொட்டு நீரைக்கூட உற்பத்தி செய்ய முடியாது. தண்ணீரைக் குறித்து இறைவன் தனது வேதமான குர்ஆனில் இவ்வாறு குறிப்பிடுகிறான்.  " மேகத்தில் இருந்து அதனை நீங்கள் பொழிய வைக்கின்றீர்களா? அல்லது நாம் பொழிய வைக்கின்றோமா? நாம் விரும்பினால் அதனை (நீங்கள் குடிக்க முடியாத) உப்பு நீராக ஆக்கி இருப்போம். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா? " (அல்குர்ஆன்–56:68) " நிச்சயமாக நாமே வறண்ட பூமியின் பக்கம் மழையின் மேகத்தை ஓட்டி (பொழியச் செய்து) அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய (ஆடு, மாடு, ஒ