ராஷ்ட்ரியம் சுவயம் சேவக் சங்கம் ஒரு சுருக்கமான பார்வை

ராஷ்ட்டிரியம் சுவயம் சேவக்(RSS) என்னும் ஆக்டோபஸ்

1925-ம் ஆண்டு அக்டோபர் 15ம் நாளில் மஹராஷ்ட்டிர மாநிலம் நாக்பூரில் "ராஷ்டிரியம் ஸ்வயம் சேவக் " என்கிற சங்பரிவார்களின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். சித்பவன பிராமணரும் மருத்துவருமான கேசவ பலிராம ஹெட்கேவார் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.

கொள்கையும் சித்தாந்தமும்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்பது பிராமணியத்தின் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இது பிரமாணர்களை குறிப்பிடுவது அல்ல. பிராமணியம் என்பது கொள்கை. அதாவது ஆதிக்கம் செலுத்துவதும், ஒடுக்குவதும் பிராமணியத்தின் முக்கிய அம்சம் ஆகும்.

பல்வேறு கலாச்சாரம், மொழி, பண்பாடு கொண்ட தேசத்தில் இந்து பண்பாடு மட்டுமே உயர்ந்தது என்றும் அப்படி இந்துவாக இல்லாதவர்கள் தேசவிரோதிகள் என்றும் பல்வகைப்பட்ட தேசிய இனங்களின் மரபு உரிமைகளைப் பறித்து ஹிந்து தேசியம் என்னும் ஒற்றைக் கலாச்சாரத்தை நம் இந்திய மக்கள் மீது திணிக்கும் பாசிசச் செயல்பாடுகள் கொண்ட ஒரு இயக்கம் RSS.தங்களின் உறுப்பினர்களுக்கு ஒரு மாதிரியான சீருடையையும்,பயிற்சிகளையும் கொடுத்து ராணுவக் கட்டமைப்புடன் இயங்கும் இயக்கம் இது.

ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு அமைப்பு மட்டுமல்ல.அது ஒரு தத்துவம்.தெளிவாகச் சொல்லவேண்டுமானால் இந்தியாவின் சமூக அமைப்பே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் வலியுறுத்தும் வர்ணாஸ்ரம தர்மத்தை சாதிய வடிவத்தில் அடிப்படையாகக் கொண்டதாகத்தான் இருக்கிறது. இதை முழுமைப்படுத்திட வேண்டும். இந்த நாடே ஒரு முழுமையான இந்து ராஷ்டிரமாக்கப்பட வேண்டும் என்ற முனைப்போடுதான் ஆர்.எஸ்.எஸ். தனது செயல் திட்டங்களை முடுக்கி விடுகிறது.

உறுப்பினர் நடைமுறை

ஆர் எஸ் எஸ் அமைப்பில் உறுப்பினராக சேர எவ்வித நடைமுறையும் இல்லை. உறுப்பினர் கட்டணம், அடையாள அட்டை வழங்கப்படுவதில்லை. சேர விரும்புவர்கள் அருகில் உள்ள ஆர் எஸ் எஸ் கிளைக்குச் (ஷாகா) (அடிப்படை சந்திப்பு) சென்று தானாக உறுப்பினராக இணைந்து கொள்ள வேண்டியது. இவ்வமைப்பில் உறுப்பினர்களின் விவரங்கள் குறித்துக் கொள்ளப்படுவதில்லை.தேசிய அளவில் சர்சங்கசாலக் என்ற பெயரில் தேசியத் தலைவரும் மற்றும் பொதுச் செயலாளர் தலைமையில் அமைப்பு மற்றும் நிர்வாகம் நிர்வாகிக்கப்படுகிறது. மாநில, மாவட்ட மற்றும் கிளைகள் அளவில் ஆர் எஸ் எஸ் பிரச்சாரகர்கள் தலைமையில் செயல்படுகிறது.இந்தியா முழுவதும் பல லட்சக்கணக்கான உறுப்பினர்களையும்,52 ஆயிரத்திற்கும் மேலான ஷாகா கிளைகளையும் கொண்டுள்ளது.

தேர்தல் அமைப்பு முறை

ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவருக்கான பதவி தேர்தல் முறையில் நடத்தப்பட மாட்டாது.தற்போதைய தலைவர் தன்னுடைய ஓய்வு காலத்தை அடைந்ததும் அடுத்த தலைவரின் பெயரை அறிவித்து விட்டுத்தான் ஓய்வு பெறுவார்.மூன்று முறைக்கு மேல் யாரும் தலைவராக நீடிக்க முடியாது.இங்கு தலைவருக்கு நிகரான பதவியாக பொதுச் செயலாளர் பதவி விளங்குகிறது.மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.இவரை தேசியப் பொதுக் குழு கூடி தேர்ந்தெடுக்கும்.கூடவே நாடு முழுமைக்குமான துணைப் பொதுச் செயலாளர்கள்,RSSன் துணை அமைப்புகளான சங்பரிவார் இயக்கங்களுக்கான நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

சங்கப்பரிவாரம்

எஸ் எஸ் தலைமையின் கீழ் இயங்கும் துணை அமைப்புகளைக் கொண்ட தொகுப்பையே சங்பரிவார் என அழைக்கப்படுகிறது.இதில் இவர்களின் துணை அமைப்புகளான,விஷ்வ ஹிந்து பரிசத்,பஜ்ரங்தள்,அகில பாரத வித்யார்த்தி பரிசத்,துர்கா வாஹினி,பாரதிய ஜனதா கட்சி,பாரதிய மஸ்தூர் மற்றும் பாரதிய கிஷான் சங்கம்,ராஷ்ட்ரிய சேவிகா சமிதி,பால கோகுலம்,ஹிந்து மகா சபா,ஹிந்து முன்னணி,முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச்,வனவாசி கல்யாண் ஆஸ்ரம் மற்றும் வெளிநாடுகளில் செயல்படும் ஹிந்து ஸ்வயம் சேவக் சங்கம்(HSS) என 30க்கும் மேற்பட்ட துணை அமைப்புகள் சங்பரிவார் பட்டியலில் உள்ளன.

பாசிசத்துடன் தொடர்பு

             Dr.மூஞ்சே

1931ஆம் ஆண்டு இலண்டனிலே வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவரான ‘மூஞ்சே’ என்பவர் இலண்டன் சென்றார். கலந்து கொண்டு இந்தியாவிற்கு திரும்புகிற வழியில் இத்தாலியில் பல இடங்களுக்குச் சென்று அங்கே முசோலினி நடத்திய பாசிச பள்ளிகள், இராணுவப் பள்ளிகள் ஆகிய அனைத்தையும் பார்வையிட்டு விட்டு, ‘இது ஒரு சிறப்பான கட்டமைப்பு; இதுதான் மக்களை தயார்படுத்தும் சிறப்பான முறை; இதே போலத்தான் இந்தியாவிலும் அமைக்க வேண்டும்’ என்று அந்த பள்ளிகளிலேயே வருகைப் பதிவேடுகளில் அவர் குறிப்புகளை எழுதி வைத்துள்ளார்.


1931ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் தேதி அவர் முசோலினியை சந்தித்தார். “நீங்கள் இத்தாலியில் எப்படி மக்களை ஒடுக்குகிற சர்வாதிகாரத்தை, அடக்குமுறையை, பாசிசத்தை நடத்துகிறீர்களோ அதேபோல ஒரு கொள்கையை இந்தியாவில் துவங்கி ‘இந்து இராஷ்டிரத்தை’ உருவாக்கப் போகிறோம்” என்று அவர் முசோலினியை சந்தித்து கூறியிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் பார்வையிட்ட முசோலினியின் இராணுவப் பள்ளிகளைப் பாராட்டி குறிப்புகளை எழுதினார் மூஞ்சே. ஆவணக் காப்பகங்களில் அவற்றைத் தேடி பதிவு செய்துள்ளார் இத்தாலி ஆய்வாளர்.

“இதேபோன்ற இராணுவ அமைப்புகளை ஏற்கனவே நான் சுயமாக சிந்தித்து தொடங்கியிருக்கிறேன். சந்தர்ப்பம் கிடைக்கும்போது இந்தியாவிலும் இங்கிலாந்திலும் உங்களுடைய இராணுவப் பள்ளிகளைப் புகழ்ந்து பொது வெளிகளில் பேசத் தயங்க மாட்டேன்” என்று மூஞ்சே பதிவு செய்திருக்கிறார்.

அங்கிருந்து திரும்பிய மூஞ்சே, இங்கே கோல்வாக்கர் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர்களைச் சந்தித்து விவாதிக் கிறார். பாசிசத்தை ஆதரித்து இந்தியாவில் மாநாடுகளை நடத்துகிறார்கள்.

இந்து இளைஞர்களுக்கு இராணுவப் பள்ளிகளை துவங்குகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் இன் கொடியாக ஹிட்லர் பயன் படுத்திய சுவஸ்திக் கொடியை ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக் கொண்டது.

தொடரும்........

Comments

Popular posts from this blog

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

வஸதிய்யா

ஹஜ்.