Posts

Showing posts from October 17, 2021

மனித உயிரின் மதிப்பும், வாழ்வதற்கான உரிமையும்-3

Image
வாழ்வுரிமை! உயிர் வாழும் உரிமையும், நம்மை அழிக்க நினைப்பவனை எதிர்த்துப் போராடும் உரிமையும் இஸ்லாத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை பார்த்தோம். அது போலவே தற்கொலையை இஸ்லாம் வன்மையாக கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் தடுக்கவும் செய்கிறது என்பதும் வாழ்வுரிமையின் மற்றொரு பாகமாகும். மற்றவரின் உயிரைப் பறிக்கும் அதிகாரம் மனிதனுக்கு இல்லை, ஆனால் தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் உரிமை உண்டு என்பது சிலரின் எண்ணம். அதனாலேயே வாழ்க்கையில் விரக்தியும் துக்கமும் அதிகமாகும்போது மரணத்தில் அபயம் தேடுகின்றனர். கல்வியறிவில் முன்னிலையில் இருக்கும் கேரள மாநிலத்தவரே மற்ற மக்களை விட அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பது புள்ளி விவரக் கணக்கு. நமக்கு வாழ்க்கை அருளிய அல்லாஹ்வுக்கே அதை பறிக்கும் உரிமை உண்டு என்ற அசையாத நம்பிக்கை முஸ்லிம்களுக்கு இருக்கும் காரணத்தால் சமீப காலம் வரை முஸ்லிம்களுக்கிடையில் தற்கொலை என்பது பெயரளவில் கூட இல்லாமல் இருந்தது. ஆனால் மேற்கத்திய நாகரிக மோகம் இப்போது முஸ்லிம்களுக்கு இடையிலும் வேகமாக பரவி வரும் காரணத்தால் அங்குமிங்குமாக முஸ்லிம்களுக்கு இடையிலும் தற்கொலை பரவிவருகிறது.

மனித உயிரின் மதிப்பும், வாழ்வதற்கான உரிமையும்-2

Image
வாழ்வுரிமை ! மனித உயிரின் முக்கியத்துவத்தையும் அதை அநியாயமாகப் பறித்தால் மறுமையில் கிடைக்கக் கூடிய தண்டனையைக் கூறி அச்சுறுத்துவதோடு  நின்று விடவில்லை இஸ்லாம். பாதுகாப்பு என்பதை செயல்படுத்தும் விதமாக ஒரு காரியத்தையும் முன்னிலைப்படுத்துகிறது. அநியாயமாக ஒரு உயிரை பறிப்பவனுக்கு மரணதண்டனையை இஸ்லாம் விதிக்கிறது.  மனிதனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலை வரும்போது ஹராமான செயல்களைக் கூட செய்ய அனுமதிக்கிறது இஸ்லாம். மனிதனின் வாழ்வுரிமையை நிலைநிறுத்த இஸ்லாம் கூறும் வழிமுறையே இந்த விதிவிலக்கு. உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலை வரும்போது இஸ்லாம் மனிதனின் பக்கமே நிற்கிறது.  கீழே கூறப்பட்ட குர்ஆன் வசனம் இதைத் தெளிவுபடுத்துகிறது. " (தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன. (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்

மனித உயிரின் மதிப்பும்,வாழ்வதற்கான உரிமையும்-1

Image
வாழ்வுரிமை! ஒவ்வொரு மனிதனுக்கும் கண்டிப்பாக கிடைக்க வேண்டியது வாழ்வதற்குரிய உரிமை என்ற கருத்தில் மனிதாபிமானமுள்ள எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தில் மிகவும் முக்கியமானதாக வாழ்வுரிமை சேர்க்கப்பட்டுள்ளது. பூமியில் பிறந்த ஒரு மனிதனை, அவன் இயற்கையாக மரணம் அடையும் முன்னர் அவனது உயிரை எடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்பது மட்டுமல்ல,  அவன் மரணிக்கும் வரை அவன் வாழ்வதற்குத் தேவையான எல்லா வாய்ப்புகளும் அமைத்துக் கொடுக்க வேண்டிய கடமையும் சமூகத்திற்கு உண்டு. வாழ்வதற்கான உரிமையை பற்றி சிந்திக்கவும், அதற்காக போராட்டக் களத்தில் குதிக்குவும் பல காரணங்கள் உண்டு. சர்வாதிகாரிகளும், அநியாயமும், அநீதியும் சேர்ந்த ஆட்சிக்கு எதிராக குரல் உயர்த்திய ஆயிரக்கணக்கான மக்கள் சிரச்சேதம் செய்யப்பட்டதற்கு வரலாறுகளே சாட்சி. தொடர்ந்து நடந்த இதுபோன்ற குரூரங்களே வாழ்வதற்கான உரிமையை போராடிப் பெற வேண்டிய நிலையை உண்டாக்கியது. அதிகாரபலமும் பணபலமும் உள்ளவர் எவரையும் எக்காரணமும் இல்லாமல் கொன்றொழிக்கலாம் என்ற நிலைக்கு எதிராக உயர்ந்த அழுத்தமான எதிர்ப்பே வாழ்வுரிமை போராட்டத்திற்கு அடித

ராஷ்ட்ரியம் சுவயம் சேவக் சங்கம் ஒரு சுருக்கமான பார்வை

Image
ராஷ்ட்ரியம் சுவயம் சேவக் என்னும் ஆக்டோபஸ்-3 ஊடுருவல்கள் தேசத்தின் அனைத்துத் துறைகளிலும் இவர்களின் ஊடுருவல் இருக்கிறது.சாதாரண பாமரர்கள் முதல் மெத்தப்படித்த மேதாவிகள் அவைகள் வரை நுழைந்திருக்கிறார்கள்.அரசியல்வாதிகளில் இருந்து அதிகாரவர்க்கங்கள் வரை தங்களின் ஆதிக்கத்தை நிறுவி இருக்கிறார்கள்.சிறு குழந்தைகளுக்கான இயக்கத்தில் இருந்து ராணுவத்தில் பணிபுரிந்து வெளிவரும் வீரர்கள் வரை இயக்கங்களையும்,பிரிவுகளையும் வைத்திருக்கிறார்கள்.தேசத்தின் அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களிலும் தங்களின் உறுப்பினர்களை கொண்டு சேர்த்திருக்கிறார்கள்.கிட்டத்தட்ட ஒரு நிழல் அரசாங்கமாக இவர்கள் செயல்படுகிறார்கள்.ஊடகத்துறையில் இவர்களின் ஆதிக்கம் உச்சத்தை தொட்டிருக்கிறது. வெளிநாட்டு நிதி உலகிலேயே அதிகமாக வெளிநாட்டு நிதியைப் பெறும் அரசு சாரா நிறுவனமாக ஆர் எஸ் எஸ் விளங்குகிறது.இந்த நிதியை அவர்கள் எதற்கு பயன்படுத்துகிறார்கள் என்று இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஆர் எஸ் எஸ்ஸின் பிரிவான ஹிந்து சுவயம் சேவக்(HSS) என்னும் இயக்கத்திற்கு இதில் மிகப்பெரிய பங்கிருக்கிறது.இந

ராஷ்ட்டிரியம் சுவயம் சேவக் சங்கம் ஒரு சுருக்கமான பார்வை

Image
ராஷ்ட்ரியம் சுவயம் சேவக்(RSS) என்னும் ஆக்டோபஸ்-2 நாட்டு விடுதலையில் ஆர் எஸ் எஸ். நாட்டின் சுதந்திரப் போராட்ட காலத்தில் அனைத்து மக்களும் ஆங்கிலேயரை எதிர்த்து விடுதலைக்காக போராடும் போது அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாத ஒரே அமைப்பு இந்த இயக்கமே.வெள்ளையர்களுடனான தங்களின் நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டு தங்களின் விசுவாசத்தைக் காட்ட விடுதலைப் போராட்டங்களில் பங்கெடுத்த போராளிகளை ஆங்கிலேயர்களிடம் காட்டிக் கொடுத்த பெருமை இவர்களுக்கு உண்டு. அதோடு சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கவாதச் செயலான தேசத்தந்தை காந்திப் படுகொலையில் சம்பந்தப்பட்ட நாதுராம் கோட்சே உள்ளிட்டோர் RSS இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான்.சுதந்திர தினத்தன்று இவர்கள் மூவர்ண தேசியக் கொடியை ஏற்ற மாட்டார்கள்.தங்களின் கொடியான காவிக் கொடியைத்தான் ஏற்றுவார்கள். சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயல்பாடுகள் தங்களுடைய பிராமணிய ஹிந்துத்துவ மேலாதிக்கம் மற்றும் அகண்ட பாரதம் என்ற கொள்கைக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காதவர்கள் இவர்கள்.ஹிந்துக்கள் அல்லாத மற்ற மக்களை இந்த நாட்டின் மக்களாக இவர்கள் அங்கீகரிப்பதில்லை.இவர்களின்

ராஷ்ட்ரியம் சுவயம் சேவக் சங்கம் ஒரு சுருக்கமான பார்வை

Image
ராஷ்ட்டிரியம் சுவயம் சேவக்(RSS) என்னும் ஆக்டோபஸ் 1925-ம் ஆண்டு அக்டோபர் 15ம் நாளில் மஹராஷ்ட்டிர மாநிலம் நாக்பூரில் "ராஷ்டிரியம் ஸ்வயம் சேவக் " என்கிற சங்பரிவார்களின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். சித்பவன பிராமணரும் மருத்துவருமான கேசவ பலிராம ஹெட்கேவார் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. கொள்கையும் சித்தாந்தமும். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்பது பிராமணியத்தின் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இது பிரமாணர்களை குறிப்பிடுவது அல்ல. பிராமணியம் என்பது கொள்கை. அதாவது ஆதிக்கம் செலுத்துவதும், ஒடுக்குவதும் பிராமணியத்தின் முக்கிய அம்சம் ஆகும். பல்வேறு கலாச்சாரம், மொழி, பண்பாடு கொண்ட தேசத்தில் இந்து பண்பாடு மட்டுமே உயர்ந்தது என்றும் அப்படி இந்துவாக இல்லாதவர்கள் தேசவிரோதிகள் என்றும் பல்வகைப்பட்ட தேசிய இனங்களின் மரபு உரிமைகளைப் பறித்து ஹிந்து தேசியம் என்னும் ஒற்றைக் கலாச்சாரத்தை நம் இந்திய மக்கள் மீது திணிக்கும் பாசிசச் செயல்பாடுகள் கொண்ட ஒரு இயக்கம் RSS.தங்களின் உறுப்பினர்களுக்கு ஒரு மாதிரியான சீருடையையும்,பயிற்சிகளையும் கொடுத்து ராணுவக் கட்டமைப்புடன் இயங்கும் இயக்கம் இது. ஆ

தனிமனிதனும் சமூகமும்

Image
தனிமனிதன் சமூகம் குறித்த ஒரு சிறு இஸ்லாமியப் பார்வை மனித வரலாற்றில் தனி மனிதனும் அவனது உரிமைகளும் எப்போதும் சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருக்கிறது. மனித சமூகத்தின் அஸ்திவாரமே தனிமனிதன்தான் என்பதை அங்கீகரிக்கும் அதேநேரம், தனிமனிதன் சமூகத்திற்காகவா அல்லது சமூகம் தனிமனிதனுக்காகவா என்ற சர்ச்சை அறிவுஜீவிகளுக்கும் மத்தியில் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  மனிதன் ஒரு சமூக உயிரினம். தனியாக வாழ்வதோ, தனியாக வளர்வதோ, முன்னேறுவதோ அவனால் முடியாது. சமூகத்தோடு சேர்ந்து வாழும் வகையிலேயே அவன் இயற்கையாக படைக்கப்பட்டுள்ளான். பிறந்தது முதல் சமூகத்தோடு எந்த தொடர்பும் இல்லாமல் ஒரு குழந்தை வளர்க்கப்படுமானால் அவனால் முழுமை பெற்ற ஒரு மனிதனாக வளர்வது சாத்தியமில்லை என்று சமூக அறிவியல் ஆராய்ச்சிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இன்று வரை உள்ள மனிதர்களையும் சமூகங்களையும் கவனமாக பரிசீலித்து ஆராய்ந்த பிறகு சமூகத்தோடு இணைந்து வாழ்க்கை நடத்தாத ஒரு மனிதனின் வாழ்க்கை மிகவும் மோசமாக, சகிக்க முடியாததாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் அபிப்பிராயப் படுகின்றனர். " மனிதனின் உடல் வளர்ச்சியும் இன்னும் அறிவு