Posts

Showing posts from 2021

புறக்கணிக்கப்படும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையும், மறுக்கப்படும் நீதியும்.....

Image
நெஞ்சிலும் முதுகிலும்  குத்திய கழகங்கள்  கொந்தளிக்கும் இஸ்லாமியர்கள். ---------------------------------------------------------------- கட்டுரை : சமூக ஆர்வலர் எழுத்தாளர் பூமொழி ---------------------------------------------------------------- 1997ல் கோவையில் அந்தோணி செல்வராஜ் என்ற காவலர் கொலை செய்யப்பட்டார். காவலர் அந்தோணி செல்வராஜ் கிறிஸ்தவர் என்பதை மறைத்து, ஹிந்துவை முஸ்லிம்கள் கொலை செய்துவிட்டார்கள் என்ற வன்மமான செய்தியை தீயாய்ப்பரப்பி,  கோவையில் அன்றிருந்த காவல்துறையின் சில ஃபாசிச அதிகாரிகள் மற்றும் காவலர்களின் தூண்டுதலுடனும் துணையோடும், ஹிந்துத்துவ அமைப்பினர் செய்த பெரும் வன்முறையால், பத்தொன்பது அப்பாவி முஸ்லிம்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். பலர் படுகாயப்படுத்தப்பட்டனர். முஸ்லிம்களின் கடைகள் வீடுகள் உள்ளிட்ட ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான  சொத்துக்கள் சூறையாடப்பட்டு தீக்கிறையாக்கப்பட்டது. இந்த பெருங்கலவரத்தை, துணை ராணுவப்படையைக் கொண்டு ஒடுக்கினர். இந்த பெருங்கலவரத்திற்கு எதிராக, கோபத்தின் வெளிப்பாடாக ஆவேசப்பட்டு, கோவையில் 1998 பிப்ரவரி 14ல் குண்டுவெடிப்புகள் நடத்தப்

ஹலால் தரச்சான்றும் இஸ்லாமோஃபோபியாவும்.....

Image
ஹலால் தரச்சான்றிதழ்! ஹலால் என்ற சொல் இன்று முஸ்லிம் அல்லாதவர்களின் நாவுகளிலும் கூட அதிகமாக உச்சரிக்கப்படும் ஒரு வார்த்தையாக மாறிவிட்டது. 'ஹலால்' என்ற சொல் ஆகுமாக்கப்பட்டது, அனுமதிக்கப்பட்டது என்ற அர்த்தத்தை கொண்டிருப்பதோடு, ‘ஹராம்’ தடுக்கப்பட்டது, அனுமதிக்கப்படாதது என்ற சொல்லை எதிர்ப்பதமாகவும் கொண்ட ஒரு சொல்லாகும். ஹலால் என்பதை ஒரு வார்த்தையால் விளங்கப்படுத்த முடியாத அளவு விசாலமான கருத்தைக் கொண்ட ஒரு சொல்லாகும். சுருக்கமாக சொல்வதானால் இஸ்லாமிய மார்க்கப்படி “ஒரு மனிதனின் நன்மைக்காக எதுவெல்லாம் இறைவனால் உபயோகிக்க அனுமதிக்கப்பட்டதோ அது ஹலால் (நல்லது)” என்றும், “இறைவனால் உபயோகிக்க தடுக்கப்பட்டவை ஹராம்” என்றும் கூறமுடியும்.அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான். " எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ – அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள். அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார். பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார். தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகும

பாபரி மஸ்ஜித்.... வீழ்ச்சியின் வேதனை, எழுச்சியின் அடையாளம்.....

Image
பாபரி மஸ்ஜித்!  என்றும் நம் நினைவில்!! சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதச் செயலான தேசத் தந்தை மகாத்மா காந்தி படுகொலைக்கு பிறகு நடந்த மிகப்பெரிய மற்றொரு பயங்கரவாதம் பாபர் மஸ்ஜித் இடிப்புச் சம்பவம்.இந்திய வரலாற்றில் என்றென்றும் கரும்புள்ளியாக இருக்கக்கூடிய ஒரு முக்கியமான சம்பவம் இது. பாபரி பள்ளி தகர்ப்பு என்பது 463 ஆண்டுகால முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலதத்தின் இடிப்பு மட்டும் அல்ல மாறாக,  இந்தியாவின் மதிப்பு, கண்ணியம், பல்வேறு உயர்வான கொள்கைகள் என அனைத்தையும் தான் தகர்த்தது  என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். பாபரி மஸ்ஜிதை இடிப்பதற்கு சங்கப்பரிவார தலைமையிலான ஹிந்துத்துவா பாசிச கும்பல்கள் மிக நீண்ட நெடுங்காலமாக திட்டங்களை தீட்டி படிப்படியாக அதை அதிகாரமட்டத்தின் அனைத்து தரப்பினரின் உதவியுடன் அரங்கேற்றினர்.இந்திய தேசத்தில் உலகமயமாக்கலுக்குப் பிறகான காலகட்டங்களில் ஹிந்துத்துவ பாசிசத்தின் அணிதிரட்டலுக்கு பாபர் மசூதி இடிப்பு என்பது மிக சங்பரிவாரங்களுக்கு பேருதவியாக அமைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. உத்திரப்பிரதேசத்தின் அயோத்தி நகரில் பாபரி பள்ளி இருந்த இடத்தில்தான

UAPA என்னும் அடக்குமுறைச் சட்டம்...

Image
UAPA(Unlawful Activities Prevention Act) சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் நமது இந்திய நாட்டில் ஜனநாயகத்திற்கு உட்பட்டு பல்வேறு அரசியல் சட்டங்கள் இருந்தாலும் ஒரு சில அரசியல் சட்டங்கள், சட்டப்பிரிவுகள் அதிகம் விவாதிக்கப்படுவதாக இருக்கிறது. அப்படியொரு சட்டம் தான் UAPA(Unlawful Activities Prevention Act) ஊபா என்றழைக்கப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம். இந்திய அரசியலமைப்புச் சட்டபிரிவு 19 சுதந்திர உரிமைக்கான உத்திரவாதம் அதன் குடிமக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கிறது.  அதன்படி,  * பேச்சு மற்றும் கருத்துகளை வெளியிடும் சுதந்திரம்.  * ஆயுதங்களின்றி அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம். * கழகங்கள் /சங்கங்கள் அமைக்க சுதந்திரம்.  * இந்தியா முழுவதும் சென்றுவர சுதந்திரம்.  * இந்தியாவின் எப்பகுதியிலும் தங்கி வாழும் சுதந்திரம்.  * தொழில், பணி மற்றும் வணிகங்கள் செய்யும் சுதந்திரம். ஆகியனவற்றை வழங்கியுள்ளது. இந்த 6 வகையான சுதந்திரங்களும் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. இருப்பினும், இந்திய இறையான்மையையும் ஒற்றுமையையும் பாதுகாக்க அரசியல் சாசனம் அளித்துள்ள இந்த சுதந்

இஸ்லாமிய சமூகமும், திரைப்படத் துறையும்.....

Image
இஸ்லாமிய சமூகமும் திரைத்துறையும்..... இஸ்லாம் ஒரு இறுக்கமான சமயமல்ல.அது சர்வதேச அளவில்  அனைத்து நாட்டு மக்களையும் இன, மொழி, நிறங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களையும் ஓரிறைக் கொள்கை கொண்டு இணைக்கும் ஒரு வாழ்வியல் மார்க்கமாகும்.அந்த அடிப்படையில் இஸ்லாம் கலை இலக்கியங்களுக்கு எதிரானதல்ல. உலகில் உள்ள நாடுகளில் பல்வேறு மக்கள் பல்வேறுபட்ட கலாச்சாரங்களையும்,பண்பாடுகளையும் கொண்டிருக்கிறார்கள். அவற்றை பின்பற்றுகிறார்கள்.உலகின் இரண்டாவது பெரிய சமூகம் இஸ்லாமிய சமூகம். உலகின் கண்டங்களில் உள்ள அந்தந்த தேசங்களில் இருக்கும் கலை,கலாச்சாரங்களை தன்னகத்தே உள்ளிழுத்துக் கொண்டு ஒரு சிறப்பான வாழ்வியல் நெறியையும், ஒரே மாதிரியான இஸ்லாமிய கலாச்சாரத்தையும் ஒன்றுக்கொன்று எவ்வித முரண்பாடுகள் இல்லாமல் வெளிப்படுத்தும் மார்க்கம் இஸ்லாம்.அல்லாஹ், இறைத்தூதர், குர்ஆன், தூதரின் வாழ்க்கை முறைகள் என்று இஸ்லாமிய சமூகத்தில்  இவை நான்கும் முக்கியமானதாக, கடமையானதாக இருந்தாலும், ஒரு பகுதியில் தலைமுறைகளாக, பாரம்பரியமாக பின்பற்றி வாழும் அந்தப் பகுதியின் கலாச்சாரத்தோடு தன்னை பிணைத்துக் கொண்டு, தன்னுடைய அடிப்படைக் கொ

திரிபுரா மாநிலமும்! சங்கப்பரிவாரமும்!!

Image
திரிபுரா சுருக்கமான புவியியல் பார்வை இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு, வட கிழக்கு பகுதிகளில் அமையப்பெற்ற மாநிலங்களில் திரிபுராவும் ஒன்று.நாட்டின் மிகச்சிறிய மாநிலங்களில் இதுவும் ஒன்று.இங்கு பிரதானமாகப் பேசப்படும் மொழி வங்காள மொழியாகும்.ஹிந்தி உள்ளிட்ட வட்டார மொழிகளும் பேசப்படுகின்றது.இந்த மாநிலத்தின் தலைநகரம் அகர்தலா. திரிபுரா மூன்று பக்கங்களிலும் வங்கதேசத்தால் சூழப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான அஸ்ஸாமுடன் ஒரு குறுகிய சாலையால் இணைக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்குப் பிறகு 2018 முதல் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி திரிபுராவில் நடைபெற்று வருகிறது. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பெருமளவு வங்காள இந்து மக்கள் கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்து திரிபுரா மாநிலத்தில் குடியேறினர்.இம்மாநிலத்தில் மக்கள் தொகையில் ஹிந்து சமயத்தினர் 83%மாகவும், இஸ்லாமியர்கள் 9%மாகவும், கிறிஸ்துவர்கள் 5%மாகவும் இருக்கிறார்கள். பொதுவாகவே வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா,அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், சிக்கிம் போன்ற அனைத்து பகுதிகளிலும் பூர்வக் குடிகளா

பூமி என்னும் உயிர் கிரகம்-3

Image
தண்ணீர் மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது, தண்ணீர். மனிதன் மட்டுமல்ல, நீர் இல்லாமல் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. நாம் பல நாட்கள் உணவு உண்ணாமல் உயிர் வாழ முடியும். ஆனால் ஒரே ஒருநாள் முழுவதும் தண்ணீர் குடிக்காவிட்டால் உடல் ‘செல்கள்’ வற்றி உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகக்கூடும்.மனிதர்கள் உண்ணும் உணவிலிருந்து அவனுடைய தினசரி நடவடிக்கைகளுக்கு தண்ணீர் என்பது மிக இன்றியமையாதது. தண்ணீர் என்பது இஸ்லாத்தைப் பொருத்தவரை இறைவனிடம் இருந்து வருகிற அருட்கொடையாகும். இறைவனைத் தவிர வேறு யாராலும் ஒரு சொட்டு நீரைக்கூட உற்பத்தி செய்ய முடியாது. தண்ணீரைக் குறித்து இறைவன் தனது வேதமான குர்ஆனில் இவ்வாறு குறிப்பிடுகிறான்.  " மேகத்தில் இருந்து அதனை நீங்கள் பொழிய வைக்கின்றீர்களா? அல்லது நாம் பொழிய வைக்கின்றோமா? நாம் விரும்பினால் அதனை (நீங்கள் குடிக்க முடியாத) உப்பு நீராக ஆக்கி இருப்போம். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா? " (அல்குர்ஆன்–56:68) " நிச்சயமாக நாமே வறண்ட பூமியின் பக்கம் மழையின் மேகத்தை ஓட்டி (பொழியச் செய்து) அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய (ஆடு, மாடு, ஒ

பயமும் சமூகமும்.....!

Image
பயம் ஆபத்தை சந்திக்கும் போது உயிரினங்களிடம் ஏற்படும் மன ரீதியான நெருக்கடியே பயம். தனது ஆற்றல் மற்றும் கட்டுப்பாட்டிற்கு அப்பால் உள்ள நெருக்கடிகளோ, தடுக்க முடியாத எதிர் சக்திகளோ, இழப்பிற்கான வாய்ப்புகளோ பெரும்பாலும் பயத்திற்கான காரணங்களாக அமைகின்றன.வாழ்க்கை போராட்டத்திற்கிடையே எந்த ஒரு நபரும் பயத்தை நேருக்கு நேராக சந்திப்பார்.அதனை எதிர் கொள்வது அல்லது தப்பிப்பதே அவருக்கான வழியாக அமையும்.பாதுகாப்பான வாழ்க்கைக்கு தேவையான ஆற்றலை தயாரித்துக்கொள்ள பயம் ஒரு தூண்டுதலாக அமையும். வரலாற்றுக் காலம் முதலே தனது ஆபத்துகளை முறியடிக்க தேவையான ஆற்றலை மனிதன் வெளிப்படுத்தி இருக்காவிட்டால் அவன் வாழ்க்கையே ஆபத்தில் சிக்கி இருக்கும் என்பதை ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன இந்த தத்துவம் உடல்ரீதியான வாழ்விற்கு மட்டுமானது அல்ல. ஒரு மனிதனின் அடையாளம் கலாச்சாரம் நெருக்கடியை சந்திக்கும் போது அங்கே பயம் உருவாகும்.தங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற பயம் வேறு  எல்லாவற்றையும் விட மனிதனிடம் ஆதிக்கம் செலுத்துகிறது.இதனால் பலகீனமானவர்கள் வாழ்க்கைப் போராட்டத்தில் மானம் காக்க பின்வாங்குவதை காணலாம். மாதங்களோ

பூமி என்னும் உயிர்க் கிரகம்-2

Image
சுற்றுச் சூழல்! சூழல் என்பது – எளிமையாகச் சொன்னால் – மனிதன் வாழ்வதற்குரிய இடத்தைக் குறிக்கிறது. அது காடுகள்,  மலைகள்,  மரம் செடி கொடிகள்,  காற்று,  நீர்,  வானம்,  பறவைகள்,  மிருகங்கள் போன்ற இயற்கைச் சூழலையும் உள்ளடக்கியிருக்கிறது. மனிதனால் உருவாக்கப்படும் கட்டடங்கள்,  வீதிகள்,  தோட்டங்கள்,  நீர்நிலைகள் போன்றனவற்றையும் உள்ளடக்கியிருக்கிறது. அதுபோல் உயிருள்ளவற்றையும் உயிரற்றவற்றையும் உள்ளடக்கியிருக்கிறது. மனிதனின் பேராசைகளினால் இந்த பூமி என்பது தன்னுடைய இயல்பை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறது.இதில் சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு என்பதில் மனிதன் வகிக்கும் பாத்திரம் பிரதானமானது. இஸ்லாம் சுற்றுச்சூழலை மனிதனது எதிரியாக நோக்கவில்லை. அது மனித வாழ்வின் உயிர் நாடிகளான நீர், காற்று உட்பட கோடிக்கணக்கான மரங்கள், செடிகள், கொடிகள், மலைத்தொடர்கள், மேட்டு நிலங்கள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள், பசுமையான புல் நிலங்கள், கண்கவர் நீர் வீழ்ச்சிகள், வண்ண வண்ண பூச்சி இனங்கள், பறவையினங்கள், விலங்கினங்கைகள் அனைத்தையும் ஒரே குடும்பமாகவே அணுகுகின்றது. அல்லாஹ்வின் குடும்பமாக சித்தரிக்கிற