Posts

Showing posts from September 26, 2021

வரலாற்றை மாற்ற வந்த தூதர் !

Image
நபிகளாரும்(ஸல்) -தோழர்களும்!! " பேரரசே! எங்களை விட மோசமாக வாழ்ந்தவர்கள் இப்புவியில் வேறு எவரும் இருக்க மாட்டார்கள்.அதுபோல எங்களைவிட வறுமையை அனுபவித்தோரும் எவரும் இருக்க மாட்டார்கள்.புழு பூச்சிகள் மற்றும் பாம்பு என்பது தான் எங்களின் உணவாக இருந்தன.ஆடு மற்றும் ஒட்டகத் தோல்களைத்தான் நாங்கள் ஆடையாக அணிந்து வந்தோம்.நாங்கள் பரஸ்பரம் மோதிக்கொண்டு படுகொலைகளை புரிந்து கொண்டும் இருந்தோம்.எங்களுக்கு பிறந்த பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்து வந்தோம்.அவர்களுக்கு உணவளிப்பதை நாங்கள் வெறுத்தோம். இந்நிலையில் இறைவன் எங்கள் மீது கருணை சொரிந்தான்.உன்னதமான ஒருவரை அவன் எங்களுக்கு வழிகாட்டியாக அனுப்பி வைத்தான்.அவரது ஊர்,பெயர் ,உறவுகள் மற்றும் உருவம் யாவும் ஏற்கனவே நாங்கள் அறிந்திருந்தவையேயாகும்.அவர் பிறந்த இடம் நாங்கள் போற்றி மதிக்கின்ற பகுதியில் தான் உள்ளது.அவரது குடும்பம் எங்களின் மிகச்சிறந்ததாகும். அவரது கோத்திரம் எங்கள் கோத்திரங்களில் மாண்பு மிக்க தாகும்.எங்கள் கூட்டத்தாரிலேயே சிறந்தவரும்,நேர்மையாளரும், பொறுமைசாலியும் ஆவார் அவர். அவர் எங்களை ஒரு கொள்கையின்பால் அழைத்தார்.ஆரம்பத்தில் அதை நாங

நபிகளார் நம்மோடு இருந்தால்.....

Image
அடிமை விலங்கை உடைத்தெறிந்த உன்னத தூதர்! நபி தோழர்களில் ஒருவரான அபூ மஸ்ஊத் என்பவர் ஒருமுறை தனது வேலைக்கார சிறுவனை ஏதோ காரணத்தால் சாட்டையால் அடித்தார்.அப்போது பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது: "அபு மஸ்ஊதே! நன்றாக தெரிந்து கொள்ளும்!" நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு) அவர்கள்தான் உரத்த குரலில் கூவி அழைத்துக் கூறுகின்றார்கள்.எனினும் இது இன்னாரின் குரல் என சட்டென்று இனங்காண முடியாத அளவிற்கு அண்ணலார்(ஸல்) அவர்கள் கடும் கோபம் கொண்டவராக இருந்தார்கள்.அருகே நெருங்கிச் சென்ற, நபிகளார் (ஸல்லல்லாஹு): " அபுமஸ்ஊதே!  இந்த அடிமையின் மீது உமக்குள்ள அதிகாரத்தை விட உன் மீது அல்லாஹ்வுக்கு அதிகமான அதிகாரம் உள்ளது என்பதை நீ தெரிந்து கொள்ளும்! " என்று மேலும் கூறினார்கள். நபிகளாரின் கோபம் கொண்ட நிலையினை கண்ட அபு மஸ்ஊதியின் கையிலிருந்த சாட்டை பிடி தளர்ந்து விலகி கீழே விழுந்தது. தொடர்ந்து அவர், " இனி ஒருபோதும் எந்த அடிமையையும் நான் அடிக்க மாட்டேன்.  யாரசூலுல்லாஹ்! அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை வேண்டி இதோ இவனுக்கு இப்போது விடுதலையளிக்கின்றேன்! " என்று கூறினார். இதை கேட்ட நபிகளார்