Posts

Showing posts from March 26, 2017

தன்னம்பிக்கை!!

இஸ்லாமிய வரலாற்றில் எத்தனையோ பெரிய சமூகங்களை சிறிய குழுக்களாகவும்,அதிகாரத்திற்கு வந்தபின்  சிறிய படைகளாகவும் இருந்து கொண்டு பெரிய வல்லரசுகளையும் வீழ்த்தியவர்கள் முஸ்லீம்கள்.ஆனால் இன்றைய சூழ்நிலையில் உலகம் முழுக்க இஸ்லாமிய உம்மத்தை சிதறடித்துக் கொண்டிருக்கிறார்கள் இஸ்லாமிய எதிரிகள்.உலகம் முழுக்க மிகப் பெரிய மக்கள் கூட்டங்களில் ஒன்றாக இருக்கக் கூடிய முஸ்லீம் சமூகத்தின் தற்போதைய நிலைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று தங்களின் தன்னம்பிக்கையை இழந்ததுதான். தன்னம்பிக்கை என்பது மிக முக்கியமான ஒரு தூண்டல் காரணி.ஒரு தனி மனிதருக்கோ அல்லது சமூகத்திற்கோ மாற்றம் வேண்டும் என்ற சிந்தனை வரும் பொழுது அங்கு இடம் பெற வேண்டிய முதல் அம்சமே தன்னம்பிக்கைதான்.எனவே இன்று இஸ்லாமிய உம்மத் மீளெழுச்சி பெறுவதற்கு முக்கியமான உந்துசக்தி தன்னம்பிக்கைதான். அதே நேரம் முஸ்லீம்கள் தங்களின் அனைத்துக் காரியங்களுக்கும் வழிகாட்டுதலாகக் கொண்டு பின்பற்றும் குர்ஆனில் பின்வருமா று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.َ‏         "(இதற்கு முன்பு) எத்தனையோ இறைத்தூதர்(களும் அவர்)களோடு சேர்ந்து இறை அன்பர்கள் பலரும் போர் புரிந்துள்ள