Posts

Showing posts from April 10, 2016

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

அல்லாஹு ரப்புல் ஆலமீன் மனித சமுதாயத்திற்கு வழங்கியிருக்கக்கூடிய அருட்கொடைகள் அனைத்துமே ஒன்றைவிட ஒன்று சிறப்பிற்குரியதாக இருப்பதைக் காண முடியும். ஆனால் அவை அனைத்துமே மனிதனுக்கு மிக மிக முக்கியமானவையாகும். உதாரணத்திற்கு கண் சிறந்ததா, காது சிறந்ததா? என்றோ கை சிறந்ததா, கால் சிறந்ததா? என்றோ பட்டிமன்றம் வைக்க முடியாத அளவிற்கு, விவாத பொருளாக மாற்ற முடியாத அளவிற்குத்தான் ஒவ்வொரு உறுப்பையும் அருட்கொடையாக அல்லாஹு தஆலா வழங்கியிருக்கிறான். இந்த அடிப்படையில் மனித சமுதாயத்திற்கு வல்ல இறைவனால் வழங்கப்பட்டிருக்கின்ற மிகச்சிறந்த நிஃமத் பேச்சுத்திறன் (பேசும் ஆற்றல்) ஆகும். அதை அல்லாஹ் தனது வேதத்திலே இவ்வாறு தெளிவு படுத்துகிறான்: خَلَقَ الْإِنْسَانَ  عَلَّمَهُ الْبَيَانَ அல்லாஹ் அவனே மனிதனிப் படைத்தான். அவனுக்கு (பேச்சையும்) விளக்கத்தையும்  கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு பேசும் ஆற்றலைக் கொடுத்த ரப்புல் ஆலமீன் அவன் எவ்வாறு பேச வேண்டும் என்ற இங்கிதங்களையும் (ஒழுக்கங்களையும்) கற்றுக்கொடுத்திருகின்றான். பொதுவாகவே மனிதனின் பேச்சு என்பது மற்றவர்களை பண்படுத்தாவிட்டாலும் கூட புண்படுத்தாத வகையில் அம