Posts

Showing posts from 2017

ஹஜ்.

Image
ஹஜ்! ************************ நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் கொண்டாடப்பட வேண்டிய சிந்தனை... *************************************** ஹஜ் முஸ்லிம் சமூகத்தின் சர்வதேச மாநாடு. இன்னொரு வகையில், நபி இப்ராஹீம்(அலை) அவர்களினதும், அவரின் குடும்பத்தினரினதும் தியாகங்களை ஆண்டுதோரும் நினைவூட்டும் ஒரு நிகழ்வு. ஹாஜரா(அலை) தனது குழந்தை இஸ்மாயீல்(அலை) அவர்களுக்கு தண்ணீர் தேடி ஸபா - மர்வாவிற்கிடையில் ஓடியது தொடங்கி, இப்ராஹீம்(அலை) அவர்கள் தனது மகன் இஸ்மாயீலை(அலை) குர்பான் கொடுக்க செல்லும் வழியில் குறுக்கிட்ட ஷைத்தானுக்கு கல் எறியும் நிகழ்வு என அனைத்தையும் ஹாஜிகள் இங்கு மீட்டு செயல் வடிவில் நினைவூட்டுகின்றனர். அதாவது, நபி இப்ராஹீம்(அலை) அவர்களினதும், அவரின் குடும்பத்தினரினதும் தியாகங்களை ஹஜ்ஜில் பங்கெடுக்கும் ஒவ்வொரு நபரும் 'சடங்கு ரீதியில்' மீண்டும் மீண்டும் நிகழ்த்துகின்றனர். நபி இப்ராஹீம்(அலை) அவர்களினதும், அவரின் குடும்பத்தினரினதும் தியாகங்களை இன்று வரையில் முஸ்லிம்கள் ஏன் நினைவூட்டிக் கொண்டிருக்க வேண்டும்?! ஏன் இதனை (ஹஜ்ஜை) வசதிபடைத்த ஒவ்வொரு முஸ்லிமும் செய்ய வேண்டிய 'கடமையாக' இ

தலைமைத்துவம்.

"தலைமைத்துவம்" அல்லாஹ் மனித சமூகத்தை படைத்தது முதல் யுகமுடிவு நாள் வரையிலான அனைத்து செயல்பாடுகளும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வழிமுறையிலேயே இயங்குவதற்கு நியமனம் செய்துள்ளான். ஆதி முதல் அந்தம் வரை நடக்கும் எந்த செயல்பாடுகளும், நிகழ்வுகளும் அவனுடைய ஞானத்திற்கு அப்பாற்பட்டோ, அவனது வரம்புகளை மீறியோ நடைபெறுவது இல்லை. மனித இனம் மட்டுமின்றி இப்பிரபஞ்சத்தின் அத்தனை எல்லைகளிலும் உள்ள ஒவ்வொரு ஜீவராசிகளின் ஜனனமும், மரணமும் மிகத் தெளிவாக முன்னரே தீர்மானிக்கப்பட்ட நியதியில் அவை அவற்றிற்கான வரையறையுடன்தான் இயங்குகின்றன. இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை.மேலும் அவை வாழும் இடத்தையும், (இருக்கும்) இடத்தையும், (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன. (அல் குர்ஆன் 11:6) இப்படி ஒழுங்குபடுத்தப்பட்ட உலக இயக்கம் என்பது ஒட்டுமொத்த ஜீவராசிகளுடன் மனிதர்களையும் உள்ளடக்கியதுதான். எனில் மற்றெந்த படப்புகளும் தங்களுக்கு விதிக்கப்பட்ட வரம்புகளை மீறாதபோது மனிதன் மட்டுமே தன