Posts

Showing posts from October 31, 2021

UAPA என்னும் அடக்குமுறைச் சட்டம்...

Image
UAPA(Unlawful Activities Prevention Act) சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் நமது இந்திய நாட்டில் ஜனநாயகத்திற்கு உட்பட்டு பல்வேறு அரசியல் சட்டங்கள் இருந்தாலும் ஒரு சில அரசியல் சட்டங்கள், சட்டப்பிரிவுகள் அதிகம் விவாதிக்கப்படுவதாக இருக்கிறது. அப்படியொரு சட்டம் தான் UAPA(Unlawful Activities Prevention Act) ஊபா என்றழைக்கப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம். இந்திய அரசியலமைப்புச் சட்டபிரிவு 19 சுதந்திர உரிமைக்கான உத்திரவாதம் அதன் குடிமக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கிறது.  அதன்படி,  * பேச்சு மற்றும் கருத்துகளை வெளியிடும் சுதந்திரம்.  * ஆயுதங்களின்றி அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம். * கழகங்கள் /சங்கங்கள் அமைக்க சுதந்திரம்.  * இந்தியா முழுவதும் சென்றுவர சுதந்திரம்.  * இந்தியாவின் எப்பகுதியிலும் தங்கி வாழும் சுதந்திரம்.  * தொழில், பணி மற்றும் வணிகங்கள் செய்யும் சுதந்திரம். ஆகியனவற்றை வழங்கியுள்ளது. இந்த 6 வகையான சுதந்திரங்களும் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. இருப்பினும், இந்திய இறையான்மையையும் ஒற்றுமையையும் பாதுகாக்க அரசியல் சாசனம் அளித்துள்ள இந்த சுதந்

இஸ்லாமிய சமூகமும், திரைப்படத் துறையும்.....

Image
இஸ்லாமிய சமூகமும் திரைத்துறையும்..... இஸ்லாம் ஒரு இறுக்கமான சமயமல்ல.அது சர்வதேச அளவில்  அனைத்து நாட்டு மக்களையும் இன, மொழி, நிறங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களையும் ஓரிறைக் கொள்கை கொண்டு இணைக்கும் ஒரு வாழ்வியல் மார்க்கமாகும்.அந்த அடிப்படையில் இஸ்லாம் கலை இலக்கியங்களுக்கு எதிரானதல்ல. உலகில் உள்ள நாடுகளில் பல்வேறு மக்கள் பல்வேறுபட்ட கலாச்சாரங்களையும்,பண்பாடுகளையும் கொண்டிருக்கிறார்கள். அவற்றை பின்பற்றுகிறார்கள்.உலகின் இரண்டாவது பெரிய சமூகம் இஸ்லாமிய சமூகம். உலகின் கண்டங்களில் உள்ள அந்தந்த தேசங்களில் இருக்கும் கலை,கலாச்சாரங்களை தன்னகத்தே உள்ளிழுத்துக் கொண்டு ஒரு சிறப்பான வாழ்வியல் நெறியையும், ஒரே மாதிரியான இஸ்லாமிய கலாச்சாரத்தையும் ஒன்றுக்கொன்று எவ்வித முரண்பாடுகள் இல்லாமல் வெளிப்படுத்தும் மார்க்கம் இஸ்லாம்.அல்லாஹ், இறைத்தூதர், குர்ஆன், தூதரின் வாழ்க்கை முறைகள் என்று இஸ்லாமிய சமூகத்தில்  இவை நான்கும் முக்கியமானதாக, கடமையானதாக இருந்தாலும், ஒரு பகுதியில் தலைமுறைகளாக, பாரம்பரியமாக பின்பற்றி வாழும் அந்தப் பகுதியின் கலாச்சாரத்தோடு தன்னை பிணைத்துக் கொண்டு, தன்னுடைய அடிப்படைக் கொ

திரிபுரா மாநிலமும்! சங்கப்பரிவாரமும்!!

Image
திரிபுரா சுருக்கமான புவியியல் பார்வை இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு, வட கிழக்கு பகுதிகளில் அமையப்பெற்ற மாநிலங்களில் திரிபுராவும் ஒன்று.நாட்டின் மிகச்சிறிய மாநிலங்களில் இதுவும் ஒன்று.இங்கு பிரதானமாகப் பேசப்படும் மொழி வங்காள மொழியாகும்.ஹிந்தி உள்ளிட்ட வட்டார மொழிகளும் பேசப்படுகின்றது.இந்த மாநிலத்தின் தலைநகரம் அகர்தலா. திரிபுரா மூன்று பக்கங்களிலும் வங்கதேசத்தால் சூழப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான அஸ்ஸாமுடன் ஒரு குறுகிய சாலையால் இணைக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்குப் பிறகு 2018 முதல் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி திரிபுராவில் நடைபெற்று வருகிறது. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பெருமளவு வங்காள இந்து மக்கள் கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்து திரிபுரா மாநிலத்தில் குடியேறினர்.இம்மாநிலத்தில் மக்கள் தொகையில் ஹிந்து சமயத்தினர் 83%மாகவும், இஸ்லாமியர்கள் 9%மாகவும், கிறிஸ்துவர்கள் 5%மாகவும் இருக்கிறார்கள். பொதுவாகவே வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா,அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், சிக்கிம் போன்ற அனைத்து பகுதிகளிலும் பூர்வக் குடிகளா

பூமி என்னும் உயிர் கிரகம்-3

Image
தண்ணீர் மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது, தண்ணீர். மனிதன் மட்டுமல்ல, நீர் இல்லாமல் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. நாம் பல நாட்கள் உணவு உண்ணாமல் உயிர் வாழ முடியும். ஆனால் ஒரே ஒருநாள் முழுவதும் தண்ணீர் குடிக்காவிட்டால் உடல் ‘செல்கள்’ வற்றி உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகக்கூடும்.மனிதர்கள் உண்ணும் உணவிலிருந்து அவனுடைய தினசரி நடவடிக்கைகளுக்கு தண்ணீர் என்பது மிக இன்றியமையாதது. தண்ணீர் என்பது இஸ்லாத்தைப் பொருத்தவரை இறைவனிடம் இருந்து வருகிற அருட்கொடையாகும். இறைவனைத் தவிர வேறு யாராலும் ஒரு சொட்டு நீரைக்கூட உற்பத்தி செய்ய முடியாது. தண்ணீரைக் குறித்து இறைவன் தனது வேதமான குர்ஆனில் இவ்வாறு குறிப்பிடுகிறான்.  " மேகத்தில் இருந்து அதனை நீங்கள் பொழிய வைக்கின்றீர்களா? அல்லது நாம் பொழிய வைக்கின்றோமா? நாம் விரும்பினால் அதனை (நீங்கள் குடிக்க முடியாத) உப்பு நீராக ஆக்கி இருப்போம். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா? " (அல்குர்ஆன்–56:68) " நிச்சயமாக நாமே வறண்ட பூமியின் பக்கம் மழையின் மேகத்தை ஓட்டி (பொழியச் செய்து) அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய (ஆடு, மாடு, ஒ