உரிமைக்கான போராட்டங்கள்.....

உரிமை,சுதந்திரம்,பாதுகாப்பு....

ஒரு சமூகம் தன் மீது மேற்கொள்ளப்படும் நெருக்கடிகள்,முற்றுகைகளுக்கெதிராக செயல்படுதல் என்பது மிக இன்றியமையாத ஒன்று.மனித சமூகத்தின் இயல்பான குணங்கங்களில் ஒன்று,மறுக்கப்படும் தன்னுடைய உரிமைகளுக்காக போராட்டத்தை மேற்கொள்வது ஆகும்.

உரிமைப் போராட்டம்,பாதுகாப்பு,நீதி,மனித சமத்துவம் ஆகிய சமூக குணங்கள் தானாக உருவாகுபவை.தொடர்ந்து முயற்சிகள் தேவைப்படும் துறைகள் அவை.சட்டங்களும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அமைப்புகளும் அதற்குத் தேவை.தீமைகள் நிறைந்த நிலைகளைக் காணும் போது குரல் எழுப்ப வேண்டும்.சமூகத்தைப் போராட்டங்கள் ஆட்டம் காண வைக்க வேண்டும்.

நீதி இயற்கையானது அது போல சுயநலமும் இயற்கையானதே.இவற்றிற்கிடையேயான மோதல் தனிநபர் வாழ்விலும்,குடும்ப வாழ்விலும்,சமூக வாழ்விலும் இயல்பாகவே ஏற்படும்.சொத்துக்களையும்,வாழ்க்கை வசதிகளையும் கைப்பற்றுவதற்கான ஆவேசம் மனித உள்ளங்களில் அதிகரித்து விட்டது.சுயநலம் தீவிரமடையும் போது சகவாழ்வு என்பது சிலருக்கு ஏற்றுக் கொள்ள முடியாததாக மாறிவிடும்.

சமூகத்தின் நீடித்த வாழ்விற்கு பாதுகாப்பு அத்தியாவசியமானது என்றாலும்,சமூகத்தில் அதற்கு எதிரிகளும் உள்ளனர்.அவர்கள் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.அதற்கு எதிராக தடுப்பு நடவடிக்கைககள் தேவைப்படும்.நீதிக்காக குரல் எழுப்புவதும்,போராட்டங்களும் சமூகத்தின் சமநிலையை இழக்கச் செய்வதல்ல.இந்தப் போராட்டங்களின் குறைவே அழிவிற்குக் காரணமாகும்.

நபி(ஸல்)அவர்களிடம் ஒருவர் கேட்டார், 

"எனது உடைமையை பறித்துக் கொள்ள ஒருவர் முயற்சித்தால் நான் என்ன செய்ய வேண்டும்?". 

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், "நீ அவனை எதிர்த்துப் போராடு".

அவர் மீண்டும் கேட்டார், "அவர் எனக்கு எதிராக பலத்தைப் பிரயோகித்தால்?"  

நபி(ஸல்) அவர்கள், "நீயும் பலத்தைப் பிரயோகி" என்றார்கள்.

அவர் மீண்டும் கேட்டார், "அதில் அவன் என்னை கொலை செய்தால்?" 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "நீ சுவனம் செல்வாய்." 

அவர் கேட்டார் "நான் அவனை கொலை செய்தால்?" 

நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் "அவன் நரகம் செல்வான்."

உடமைகளுக்காக மனிதர்கள் பரஸ்பரம் போராடுவதற்கு அல்ல இந்த உரையாடல்.சமூகப் பாதுகாப்பு குறித்த செய்தியைத்தான் நபி(ஸல்) அவர்கள் இந்த உரையாடலில் தெரிவிக்கிறார்கள்.துணிச்சலுடன் எதையும் எதிர்கொள்ளத் தயாரான ஆளுமைப் பண்பை கொண்டவர்களே சமூகத்தின் சாட்சிகள்.சொந்தக் காரியத்தை மட்டும் கவனிப்பது அவர்கள் இலட்சியம் அல்ல.சமூகத்தின் இறுதி இலட்சியத்திற்காக அவர்கள் எதிர்ப்பையும்,பகைமையையும் சம்பாதித்துக் கொள்கின்றார்கள்.இத்தகையோர்தான் நம்முடைய சமூகத்திற்கு அவசியமானவர்கள்.இவர்களால்தான் சமூக மாற்றம் ஏற்படும்.

-மர்ஹும் சயீத் ஷாஹிப்.
(இஸ்லாமிய மார்க்க அறிஞர்.சமூகச் செயற்பாட்டாளர்)

Comments

Popular posts from this blog

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

வஸதிய்யா

ஹஜ்.