Posts

Showing posts with the label கருப்புச் சட்டங்கள்

UAPA என்னும் அடக்குமுறைச் சட்டம்...

Image
UAPA(Unlawful Activities Prevention Act) சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் நமது இந்திய நாட்டில் ஜனநாயகத்திற்கு உட்பட்டு பல்வேறு அரசியல் சட்டங்கள் இருந்தாலும் ஒரு சில அரசியல் சட்டங்கள், சட்டப்பிரிவுகள் அதிகம் விவாதிக்கப்படுவதாக இருக்கிறது. அப்படியொரு சட்டம் தான் UAPA(Unlawful Activities Prevention Act) ஊபா என்றழைக்கப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம். இந்திய அரசியலமைப்புச் சட்டபிரிவு 19 சுதந்திர உரிமைக்கான உத்திரவாதம் அதன் குடிமக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கிறது.  அதன்படி,  * பேச்சு மற்றும் கருத்துகளை வெளியிடும் சுதந்திரம்.  * ஆயுதங்களின்றி அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம். * கழகங்கள் /சங்கங்கள் அமைக்க சுதந்திரம்.  * இந்தியா முழுவதும் சென்றுவர சுதந்திரம்.  * இந்தியாவின் எப்பகுதியிலும் தங்கி வாழும் சுதந்திரம்.  * தொழில், பணி மற்றும் வணிகங்கள் செய்யும் சுதந்திரம். ஆகியனவற்றை வழங்கியுள்ளது. இந்த 6 வகையான சுதந்திரங்களும் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. இருப்பினும், இந்திய இறையான்மையையும் ஒற்றுமையையும் பாதுகாக்க அரசியல் சாசனம் அளித்துள்ள இந்த சுதந்