Posts

Showing posts from November 14, 2021

ஹலால் தரச்சான்றும் இஸ்லாமோஃபோபியாவும்.....

Image
ஹலால் தரச்சான்றிதழ்! ஹலால் என்ற சொல் இன்று முஸ்லிம் அல்லாதவர்களின் நாவுகளிலும் கூட அதிகமாக உச்சரிக்கப்படும் ஒரு வார்த்தையாக மாறிவிட்டது. 'ஹலால்' என்ற சொல் ஆகுமாக்கப்பட்டது, அனுமதிக்கப்பட்டது என்ற அர்த்தத்தை கொண்டிருப்பதோடு, ‘ஹராம்’ தடுக்கப்பட்டது, அனுமதிக்கப்படாதது என்ற சொல்லை எதிர்ப்பதமாகவும் கொண்ட ஒரு சொல்லாகும். ஹலால் என்பதை ஒரு வார்த்தையால் விளங்கப்படுத்த முடியாத அளவு விசாலமான கருத்தைக் கொண்ட ஒரு சொல்லாகும். சுருக்கமாக சொல்வதானால் இஸ்லாமிய மார்க்கப்படி “ஒரு மனிதனின் நன்மைக்காக எதுவெல்லாம் இறைவனால் உபயோகிக்க அனுமதிக்கப்பட்டதோ அது ஹலால் (நல்லது)” என்றும், “இறைவனால் உபயோகிக்க தடுக்கப்பட்டவை ஹராம்” என்றும் கூறமுடியும்.அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான். " எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ – அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள். அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார். பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார். தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகும