Posts

Showing posts from November 20, 2016

கீதா பிரஸ்ஸும் இந்து இந்தியாவின் உருவாக்கமும்

Image
பார்ப்பனியம் கீதா பிரஸ்ஸும் இந்து இந்தியாவின் உருவாக்கமும் சஃபர் 26, 1438 (2016-11-26)   உவைஸ் அஹமது Gita Press and the Making of Hindu India  by Akshaya Mukul, Harper Collins Publishers India, pp. 552, Rs. 799 மோடியின் நவ-தாராளவாத இந்துத்துவ அரசு நாட்டையே வாரிச் சுருட்டி பெருநிறுவன முதலாளிகளிடமும் பன்னாட்டு மூலதனத்திடமும் அடகு வைக்கும் வேலையை போர்க்கால அவசரத்தில் செய்து கொண்டிருக்கிறது. மக்கள் நிதானித்து எழுவதற்கு சிறு வாய்ப்பும் அளிக்காமல் சரமாரியாக அடுத்தடுத்த தாக்குதல்களைத் தொடுத்து நிலைகுலைய வைத்துக் கொண்டிருக்கிறது. கருப்புப் பண ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி, ஊழலற்ற நிர்வாகம் போன்ற மோசடியான முழக்கங்களின் கீழ் சாமான்ய மக்களின் எளிய சேமிப்புகளைக் கூட விடாமல் உறிஞ்சி, அம்பானி-அதானி-டாடா-பிர்லா-ஜிந்தால் போன்ற பகாசுரக் கொள்ளைக் கும்பலின் பாதங்களில் சமர்ப்பிக்கும் வெட்கங்கெட்ட தரகு வேலையை மிகுந்த திமிர்த்தனத்துடன் நிறைவேற்றி வருகிறது இவ்வரசு. மோடியின் கார்பரேட் நேச, மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நாட்டு மக்கள் கிளர்ந்து எழுவதற்கான எல்லா நியாயங்களும் கூடிவந்திருக்கின்றன. இந்நி