Posts

Showing posts from October 24, 2021

பயமும் சமூகமும்.....!

Image
பயம் ஆபத்தை சந்திக்கும் போது உயிரினங்களிடம் ஏற்படும் மன ரீதியான நெருக்கடியே பயம். தனது ஆற்றல் மற்றும் கட்டுப்பாட்டிற்கு அப்பால் உள்ள நெருக்கடிகளோ, தடுக்க முடியாத எதிர் சக்திகளோ, இழப்பிற்கான வாய்ப்புகளோ பெரும்பாலும் பயத்திற்கான காரணங்களாக அமைகின்றன.வாழ்க்கை போராட்டத்திற்கிடையே எந்த ஒரு நபரும் பயத்தை நேருக்கு நேராக சந்திப்பார்.அதனை எதிர் கொள்வது அல்லது தப்பிப்பதே அவருக்கான வழியாக அமையும்.பாதுகாப்பான வாழ்க்கைக்கு தேவையான ஆற்றலை தயாரித்துக்கொள்ள பயம் ஒரு தூண்டுதலாக அமையும். வரலாற்றுக் காலம் முதலே தனது ஆபத்துகளை முறியடிக்க தேவையான ஆற்றலை மனிதன் வெளிப்படுத்தி இருக்காவிட்டால் அவன் வாழ்க்கையே ஆபத்தில் சிக்கி இருக்கும் என்பதை ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன இந்த தத்துவம் உடல்ரீதியான வாழ்விற்கு மட்டுமானது அல்ல. ஒரு மனிதனின் அடையாளம் கலாச்சாரம் நெருக்கடியை சந்திக்கும் போது அங்கே பயம் உருவாகும்.தங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற பயம் வேறு  எல்லாவற்றையும் விட மனிதனிடம் ஆதிக்கம் செலுத்துகிறது.இதனால் பலகீனமானவர்கள் வாழ்க்கைப் போராட்டத்தில் மானம் காக்க பின்வாங்குவதை காணலாம். மாதங்களோ

பூமி என்னும் உயிர்க் கிரகம்-2

Image
சுற்றுச் சூழல்! சூழல் என்பது – எளிமையாகச் சொன்னால் – மனிதன் வாழ்வதற்குரிய இடத்தைக் குறிக்கிறது. அது காடுகள்,  மலைகள்,  மரம் செடி கொடிகள்,  காற்று,  நீர்,  வானம்,  பறவைகள்,  மிருகங்கள் போன்ற இயற்கைச் சூழலையும் உள்ளடக்கியிருக்கிறது. மனிதனால் உருவாக்கப்படும் கட்டடங்கள்,  வீதிகள்,  தோட்டங்கள்,  நீர்நிலைகள் போன்றனவற்றையும் உள்ளடக்கியிருக்கிறது. அதுபோல் உயிருள்ளவற்றையும் உயிரற்றவற்றையும் உள்ளடக்கியிருக்கிறது. மனிதனின் பேராசைகளினால் இந்த பூமி என்பது தன்னுடைய இயல்பை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறது.இதில் சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு என்பதில் மனிதன் வகிக்கும் பாத்திரம் பிரதானமானது. இஸ்லாம் சுற்றுச்சூழலை மனிதனது எதிரியாக நோக்கவில்லை. அது மனித வாழ்வின் உயிர் நாடிகளான நீர், காற்று உட்பட கோடிக்கணக்கான மரங்கள், செடிகள், கொடிகள், மலைத்தொடர்கள், மேட்டு நிலங்கள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள், பசுமையான புல் நிலங்கள், கண்கவர் நீர் வீழ்ச்சிகள், வண்ண வண்ண பூச்சி இனங்கள், பறவையினங்கள், விலங்கினங்கைகள் அனைத்தையும் ஒரே குடும்பமாகவே அணுகுகின்றது. அல்லாஹ்வின் குடும்பமாக சித்தரிக்கிற

பூமி என்னும் உயிர் கிரகம்

Image
பூமி - Earth தற்போது உலகில் அதிகம் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு விசயம் பருவநிலை மாற்றமும், சுற்றுச் சூழல் சீர்கேட்டைக் குறித்தும்தான்.இந்த மாற்றங்களால் பூமி மிக வேகமாக தன்னுடைய இயல்பான தன்மைகளை இழந்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இதை எப்படி எதிர்கொள்வது என உலகம் திணறிக் கொண்டிருக்கும் வேளையில் சுற்றுச் சூழல் குறித்து இஸ்லாமும் அதன் சட்டங்களும் என்ன சொல்கிறது என சுருக்கமாக பார்ப்போம். பூமி குறித்து இஸ்லாம்! வான வெளி பிரபஞ்சத்தில் ஏராளமான சூரியக் குடும்பங்கள் இருக்கின்றன என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.அப்படிப்பட்ட ஒரு சூரியக் குடும்பத்தின் மூன்றாவது  கோளான பூமியைத்தான் தன்னுடைய படைப்புகளாகிய மனிதர்களை வசிக்க இறைவன் தேர்ந்தெடுத்தான்.பூமியைப் படைத்த, தன்னுடைய வல்லமையை இறைவன் இப்படிக் கூறுகிறான்.. ‘‘அல்லாஹ்தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியில் இருந்தும் அவற்றைப் போலவும் படைத்தான். அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளை இறங்கிக் கொண்டே இருக்கிறது’’  (அல்குர்ஆன்–65:12). (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தா

புவி வெப்பமயமாதலும், பருவநிலை மாற்றங்களும்..

Image
புவிவெப்பமயமாதல்(Global Warming) பல வருடங்களாகவே உலகில் காலநிலை மாற்றம் என்பது மிகவும் மோசமான நிலையிலேயே இருந்து வருகிறது. ஓசோன் படலம் பாதிப்பு, காற்று மாசு, நீர் பற்றாக்குறை, பருவமழையின்மை, புவியின் வெப்பநிலை மாற்றம் என பல நிகழ்வுகள் நம்மை பெரிய அளவில் அச்சுறுத்திக்கொண்டுதான் இருக்கிறது. புவி வெப்பமயமாதலால் பெருவெள்ளம், சூறாவளி, வறட்சி, நோய்கள், கடல்வள அழிவு, பனிப்பாறை உருகுதல், கால நிலை மாற்றம் ஆகியவை ஏற்படுகின்றன. உலகின் வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ் என்பதிலிருந்து, ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்துவிட்டது. இதை 16 டிகிரி ஆகிவிடாமல் தடுக்கும் முயற்சியில் உலக நாடுகள் இருக்கின்றன, 15.5 டிகிரிக்குள் புவிவெப்பத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.இதிலும் அமெரிக்கா,ஐரோப்பி வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளான பிரேசில், இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை வஞ்சிக்கின்றன. பூமி மேற்பரப்பில் சராசரி வெப்பநிலை அதிகரித்திருப்பதால் துருவப் பனிப்பாறைகளும் விரைந்து உருகி வருகின்றன. அத்துடன் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தும் சூறாவளிகளும், புயல்களும் அடிக்கடி ஏற்ப

மனித உயிரின் மதிப்பும், வாழ்வதற்கான உரிமையும்-4

Image
வாழ்வுரிமை! அநியாயமாக கொல்லப்படுவதையும் தற்கொலை செய்வதையும் கூடாது என்று தடுத்த இஸ்லாம், முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்புக்காக அவசியம் ஏற்படும் போது தம்முடைய உயிரையும் அர்ப்பணிக்க தயாராக இருக்கவேண்டும் என்று படிப்பிக்கிறது. இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கில் எதிரிகள் களத்தில் இறங்கினால், முஸ்லிம்கள் புறமுதுகு காட்டாமல் கோட்டைச்சுவர் போல் உறுதியாக நின்று அவர்களை எதிர்க்க வேண்டும். இந்தப் போராட்டத்தில் ஒரு முஸ்லிம் கொல்லப்பட்டால் அவனுக்கு ஷஹீதுடைய  அந்தஸ்து கிடைக்கும் நிச்சயம் கிடைக்கும்.ஷஹீதுகளுக்கு நிச்சயமாக சுவர்க்கம் கிட்டும்  என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் சுவனத்தில் பறவைகளாக ஆனந்தமாக பறந்து திரிவர் என்று ஹதீஸில் காணலாம். " அல்லாஹவின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என்று எண்ணாதீர்கள். மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர். உணவளிக்கப்படுகின்றனர் " என்ற வசனம் பற்றி நாங்கள் நபி (ஸல்) அவர்களிம் கேட்டோம்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள்,  "அவர்களின்(ஷஹீதுகள்) உயிர்கள் பச்சை நிறத்துப் பறவையின் கூடுகளுக்குள் இருக்கும்.