ஊடகம் என்னும் ஆயுதம்

ஊடக பயங்கரவாதம்!!

இந்தியாவில் பத்திரிக்கைத் துறையை மூன்று வகையாகப் பிரித்து பார்க்க வேண்டி உள்ளது.முதலாவதாக சுதந்திரத்திற்கு முன் பத்திரிக்கைகளை ஆரம்பித்தவர்கள்.இதில் பத்திரிக்கையை தொடங்கியவர்கள்,அங்கு பணியாற்றியவர்கள் என பெரும்பாலானவர்கள் சமூகப் போராளிகள்,அறிவாளிகள்,துணிச்சல் மிக்கவர்கள்,பல்மொழித் திறன் பெற்றவர்கள்,தங்களின் கொள்கைகளுக்காக சிறை சென்றவர்கள்,லட்சியம் மற்றும் கொள்கைகளுக்காக தங்களின் சொந்த வாழ்க்கை மற்றும் உயிரையும் துறந்தவர்கள்.

இரண்டாவதாக, நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பத்திரிக்கை தொடங்கியவர்கள்.பணக்காரர்கள்.பத்திரிகை துறையில் முதலீடு செய்வதின் வழியாக லாபம் ஈட்ட வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டவர்கள்.குறைந்தபட்ச தொழில் தர்மத்தையும்,பத்திரிக்கை மரபு மற்றும் தர்மத்தையும் கடைபிடித்து லாப நோக்கோடு பத்திரிக்கையை நடத்தியவர்கள்.இவர்களில் பலர் சமூக அக்கறையுடனும் சில போது அதிகார மையங்களிடம் அடிபணியாதவர்களாகவும் இருந்தனர்.

மூன்றாவது தரப்பினர் உலகமயமாக்கல் மற்றும் தாராள,தனியார் மயமாக்கலுக்குப் பிறகு தொடங்கப்பட்ட காட்சி ஊடகங்கள்.இவர்கள் பணத்தை மட்டுமே பிரதான நோக்கமாக கொண்டு ஊடகத்துறையில் இயங்கியவர்கள்.இவர்கள் ஊடகம் சார்ந்த எந்த மரபுகளையும்,விதிகளையும் கடைப்பிடிக்காதவர்கள்.பத்திரிக்கை தர்மங்களை மீறுவதையே கொள்கையாக கொண்டவர்கள்.இவர்கள் விரும்பிய செய்திகளை வெளியிடுவார்கள்.தாங்கள் வெளியிடும் செய்திகளில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி அக்கறை இல்லாதவர்கள்.சூழல்களுக்கு ஏற்றார் போல் பரபரப்பாக மக்களுக்கு செய்திகளைக் கொடுப்பவர்கள்.அறம் என்பதே இல்லாமல் வர்த்தக அடிப்படையில் மட்டும் ஊடகங்களை நடத்துபவர்கள் இவர்கள்.இத்தைகையோரைத்தான் கார்ப்பரேட் ஊடகத்தினர் என அழைக்கப்படுகின்றார்கள்.

முதல் இரண்டு பிரிவினர் தற்போது எங்கும் இல்லை.ஆனால் மூன்றாவது வகையினர் ஊடக உலகில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கினர்.பொதுமக்கள் எந்த செய்திகளை வாசிக்க வேண்டும் என்பதை இவர்களே தீர்மானிக்கிறார்கள்.ஒரு கார்ப்பரேட் ஊடக நிறுவனத்திற்கு  தினசரி நாளிதழில் இருந்து பல்வேறு வகையான தொலைக்காட்சி ஊடகங்கள் பல மொழிகளில் இருக்கின்றன.இவற்றைக் கொண்டு பொதுமக்களை இவர்கள் ஆட்டிப் படைக்கிறார்கள்.

தற்போதைய காட்சி ஊடகங்கள் மற்றும் அச்சு ஊடகங்களைப் பொறுத்தவரை அவைகள் உலகம் முழுக்க கோலோச்சும் பன்னாட்டு நிறுவனங்களாலும்,ஆதிக்க வர்க்கங்களாலும்,இந்தியாவில் உயர்சாதி இந்துக்களாலும் ஆணாதிக்க மனோபாவத்துடன் நடத்தப்படுகின்றன.இத்தகைய ஊடகங்கள் பெரும்பாலும் ஆளும் அரசுகளின் செல்லப்பிராணிகளாகவே இருக்கின்றன.உலகின் முக்கால்வாசி ஊடகங்களை யூதர்களும்,அவர்களின் பின்னணியில் இருப்பவர்களுமே நடத்துகிறார்கள்.

கறுப்பின மக்கள்,முஸ்லீம்கள்,தலித் மக்கள் மீதான ஊடகங்களின் தாக்குதல்கள் காலங்கள் தோறும் நடந்து கொண்டே இருக்கின்றன.செப்டம்பர் 6 2011 அன்று அமெரிக்காவின் உலக வர்த்தக மைய இரட்டைக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டதை தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற தலைப்பில் இஸ்லாமிய மார்க்கத்தை குறி வைத்து தன்னுடைய ஏகாதிபத்தியப் போரை அமெரிக்கா நடத்தத் தொடங்கியது.சற்றேறக் குறைய அதே போன்றதொரு பயங்கரவாதத்தை உலகம் முழுக்க காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் இஸ்லாமிற்கெதிராக நடத்த ஆரம்பித்தனர்.இதன் விளைவுகள் கடந்த சில தசாப்தங்களாக உலக அரங்கில் மிக மோசமான வெறுப்பரசியல்களை இஸ்லாமியர்களுக்கெதிராக விதைத்திருக்கின்றன.

இந்தியாவில் கடந்த 2015ம் ஆண்டு நடந்த தேர்தலில் வலது சாரிகளான பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதில் ஊடகங்களின் பங்கு மகத்தானது.எந்த ஒரு நாட்டிலும் ஆட்சி அமைக்கும் அரசுகளுக்கு ஆதரவாகவே ஊடகங்கள் நடந்து  கொள்வார்கள்.சில விதி விலக்குகள் இருக்கலாம்.ஆனால் பெரும்பான்மையான ஊடகங்கள் அரசின் ஊதுகுழலாகவே மாறி விடுவார்கள்.

சிறுபான்மை மக்களான இஸ்லாமியர்களை எந்தளவு மோசமாக சித்தரிக்க முடியுமோ அந்த அளவு செய்திகளை வெளியிடுவார்கள்.உதாரணமாக,
கடந்த 2005ல் இருந்து தொடர்ச்சியாக சில இடங்களில் அதாவது,சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ்,மாலேகான்,நந்தித்,ஹைதராபாத்,டெல்லி,தென்காசி என நிறைய இடங்களில் குண்டுகள் வெடித்தன.உடனே ஊடகங்கள் இவற்றின் பின்னணியில் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள் இருப்பதாக அதுவரை கேள்விப்பட்டிராத பெயர்களைக் கொண்டு செய்திகளை வெளியிட்டார்கள்.ஆனால் பயங்கவரவாத எதிர்ப்புப் படையின் புலனாய்வில் இந்த குண்டு வெடிப்புகளுக்குப் பின்புலமாக ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கங்கள் இருக்கிறார்கள் என்று கண்டறிந்து ஆதாரத்துடன் செய்திகளை வெளியிட்டும் பெரும்பாலான ஊடகங்கள் இதை கண்டு கொள்ளவே இல்லை.பத்தோடு பதினொன்றாகவே வெளியிட்டார்கள்.போலவே வடஇந்தியப் பகுதிகளில் முஸ்லீம்கள் அற்ப காரணங்களுக்காக ஹிந்துத்துவ குண்டர்களால் அப்பாவி முஸ்லீம்கள் தொடர்த்து அடித்து படுகொலை செய்யும் போது அவற்றிற்கு எல்லாம் இந்த ஊடகங்கள் எந்த வித முக்கியத்துவமும் தரவில்லை.மாறாக சினிமா கலைஞர்கள்,அரசியல்வாதிகளின் தனிப்பட்ட விவகாரங்களில் புலனாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.


தாங்கள் நடத்தும் காட்சி ஊடகங்களில் ரியாலிட்டி ஷோ,மெகாத் தொடர்கள் என பார்க்கும் மக்களை வக்கிரங்களால் நிரப்பி,அன்றாடம் நடந்து கொண்டிருக்கும் மக்கள் விரோத நடவடிக்கைகளின் பக்கம் மக்களின் கவனங்கள் செல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.இது கூட ஒரு வகை ஊடக பயங்கரவாதம்தான்.செய்தி தொலைக்காட்சிகளின் நிலையோ இவற்றை விட மோசம்.விவாதங்கள் என்ற பெயரில் காட்டு கத்தலும் கூச்சலுமான அவசியமில்லாத விவாதங்களையும் நடத்துவது,பிரபலங்கள் எனப்படுவோர்களின் அந்தரங்கமான,வக்கிரமான பாலியல் செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது,இரவு பத்து மணிக்கு மேல் அந்தரங்கம் சார்ந்த ஆபாச நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது என மக்களை திசை திருப்பும் வேலையிலேயே குறியாக இருக்கிறார்கள்.

அரசுகள் தங்களுக்கு எதிரானவர்கள் என நினைப்பவர்களை ஆபத்தானவர்களாக,தீவிரவாதிகளாக,மக்களுக்கு எதிரானவர்களாக கட்டமைக்கும் பொறுப்பை ஊடகத்தினரிடமே ஒப்படைக்கிறார்கள்.ஊடகங்களும் குறிப்பிட்ட சாராரைக் குறித்து எதிர்மறையான செய்திகளை தினமும் வெளியிட்டு மக்கள் மத்தியில் அவர்களைக் குறித்து அச்சமூட்டும் பணிகளை செவ்வனே செய்கிறார்கள்.அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.அரச பயங்கரவாதங்கள் நிகழ்த்தப் பெறும் போது அவற்றைக் குறித்த எந்த வித காரணங்களையும் ஆராயாமல்,உண்மைத் தன்மைகளை விசாரிக்காமல் அரசுகளுக்கு இணக்கமாகவே நடந்து கொள்கிறார்கள்.
பிரதான ஊடகங்களுக்கு மாற்றாக வந்த சமூக வலைதளங்கள் கூட இன்று அரசுகளின் கண்காணிப்பிற்கும்,தணிக்கைகளுக்கும் உட்பட்டே செயல்படுகின்றன.சமூக வலைதளங்களில் கூட வலதுசாரிகள் என்போர் வெறுப்பரசியல்களின் வழியாக குறிப்பிட்ட மக்களுக்கெதிராக ஊடக பயங்கரவாதத்தை மேற்கொள்கிறார்கள்.பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வெற்றியில் சமூக ஊடகங்களின் பங்களிப்பு அபரிமிதமானது.
இன்றைய தொழில்நுட்ப உலகில் மக்களின் உணர்வுகளை தங்களுக்கு ஏற்றார் போல் வளைப்பதில் ஊடகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.காலையில் உறக்கம் விழிப்பதிலிருந்து எதைச் சாப்பிட வேண்டும்,எதைப் படிக்க வேண்டும்,எந்த உடையை அணிய வேண்டும்,எதை எங்கு வாங்க வேண்டும்,எங்கு பணியாற்ற வேண்டும் என்பது வரை தாக்கம் செலுத்துகின்றன காட்சி ஊடகங்களும்,அச்சு ஊடகங்களும்.
இறுதியாக,இந்த ஊடக பயங்கரவாதம் என்பது ஒரு விதமான மனநோய்களை மக்களிடையே ஏற்படுத்துகின்றன.அவற்றிலிருந்து வெளியே வர வேண்டும் என்றால் எதார்த்த உலகம் எப்படி இயங்குகின்றது என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையிலான மாற்று வழிகளைச் செய்ய வேண்டும்.பத்திரிக்கை தர்மம் என்பதை கடைப்பிடிக்கும் பத்திரிக்கையாளர்களையும்,இதழாசிரியர்களை உருவாக்க வேண்டும்.மாறி வரும் காலச் சூழலில் இது நீண்டகால அடிப்படையில் செய்ய வேண்டிய பணி.எப்பொழுதெல்லாம் அராஜகங்கள் எந்த வடிவில் தலை தூக்கினாலும் அவற்றை முறியடிக்க அதே வடிவில் நீதியும் தோன்றும்.அந்த நீதிக்கான வழிகளை உருவாக்குவதே நம்முடைய தலையாய பணி.அது சிரமும்,கரடுமுரடானதும்,சிக்கலானதும் கூட.எனினும் அந்த நீதியிலான செயல்முறைகளே வெல்லவும் செய்யும்.


Comments

Popular posts from this blog

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

வஸதிய்யா

ஹஜ்.