திரிபுரா மாநிலமும்! சங்கப்பரிவாரமும்!!

திரிபுரா சுருக்கமான புவியியல் பார்வை

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு, வட கிழக்கு பகுதிகளில் அமையப்பெற்ற மாநிலங்களில் திரிபுராவும் ஒன்று.நாட்டின் மிகச்சிறிய மாநிலங்களில் இதுவும் ஒன்று.இங்கு பிரதானமாகப் பேசப்படும் மொழி வங்காள மொழியாகும்.ஹிந்தி உள்ளிட்ட வட்டார மொழிகளும் பேசப்படுகின்றது.இந்த மாநிலத்தின் தலைநகரம் அகர்தலா. திரிபுரா மூன்று பக்கங்களிலும் வங்கதேசத்தால் சூழப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான அஸ்ஸாமுடன் ஒரு குறுகிய சாலையால் இணைக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்குப் பிறகு 2018 முதல் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி திரிபுராவில் நடைபெற்று வருகிறது.

இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பெருமளவு வங்காள இந்து மக்கள் கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்து திரிபுரா மாநிலத்தில் குடியேறினர்.இம்மாநிலத்தில் மக்கள் தொகையில் ஹிந்து சமயத்தினர் 83%மாகவும், இஸ்லாமியர்கள் 9%மாகவும், கிறிஸ்துவர்கள் 5%மாகவும் இருக்கிறார்கள்.

பொதுவாகவே வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா,அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், சிக்கிம் போன்ற அனைத்து பகுதிகளிலும் பூர்வக் குடிகளான பழங்குடியின மக்களே பிரதானமாக வசிக்கிறார்கள்.இன்றும் கூட அவர்களுக்கு என்று ஒரு அரசியல் தலைமை, தலைவர் என்றெல்லாம் கிடையாது.

அரசியல்

இந்திய சுதந்திரத்திற்கு பிறகு திரிபுராவில் ஏறத்தாழ கால் நூற்றாண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. பிறகு கம்யூனிசம் 35 ஆண்டுகள் ஆட்சி செய்தது. இதில் மாணிக் சர்க்கார் என்பவர் மட்டும் 25 ஆண்டு காலம் முதல்வராக ஆட்சி செய்தார். இவர் இந்தியாவிலேயே மிகக் குறைவான சொத்துக்கள் கொண்ட முதல்வர், எளிமையான முதல்வர் என கம்யூனிஸவாதிகள் அவரைப் பற்றி புகழ்ந்து கூறுவார்கள்.

கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் கம்யூனிசத்தின் கோட்டையாக இருந்த திரிபுரா 2019ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வீழ்த்தப்பட்டு தோல்வியடைந்தது.சங்பரிவாரத்தின் அரசியல் பிரிவான பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தது.திரிபுராவில் 2014 ஆம் ஆண்டு பிஜேபிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட கிடையாது. ஆனால் 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 41 சட்டமன்ற உறுப்பினர்களை உருவாக்கினார்கள்.பூர்வகுடிகளுக்கு மத்தியில் இருந்த சில  அமைப்புகளுடன் கூட்டணி வைத்து பணம், மிரட்டல் என 
குறுக்கு வழியில் அங்கு ஆட்சியை கைப்பற்றினார்கள்.

முஸ்லிம்கள்!

திரிபுராவில் புலம்பெயர்ந்து சென்ற சமுதாயங்களில் முஸ்லிம் சமுதாயமும் ஒன்று. உலகளாவிய அளவில் முஸ்லிம்களுக்கே இருந்த அந்த நேர்மையான வியாபார அமைப்புமுறைக்கு தேவையான சந்தை மணிப்பூர்,நாகாலாந்து,திரிபுரா ஆகிய மாகாணங்களில் பரந்து விரிந்திருந்தது.ஆகவே, அந்த மக்களுக்கு தேவையான பண்ட பாத்திரங்களிலிருந்து வர்த்தக சந்தை வரை முஸ்லிம்கள் தங்களை திரிபுராவில் ஆழமாக காலூன்றிக் கொண்டனர். இந்த மாநிலங்கள் அனைத்திலும் வியாபார சமூகமாகவே முஸ்லீம் சமூகத்தினர் இருந்திருக்கின்றனர்.பல பூர்வகுடிகளும் இஸ்லாமிய சமயத்தை தழுவி முஸ்லிம்களாக மாறியும் உள்ளனர். இப்படி வியாபார முறைமைக்காக புலம்பெயர்ந்து சென்ற முஸ்லிம்கள் அங்கு தங்களுடைய ஆன்மீக கலாச்சாரத்தையும் பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் போன்றவற்றையும் அமைத்து அந்த மாநில மக்களாகவே, அனைத்து சமூக மக்களுடன் கலந்து வாழ்ந்து வருகிறார்கள்.

சங்பரிவார்கள்

இந்தச் சூழ்நிலையில் இஸ்லாமியர்களுக்கும்,அங்கு இருக்கும் பூர்வகுடிமக்கள் உள்ளிட்ட பிற மக்களுக்கும் இடையே எந்தவித பிரச்சினைகளும் இல்லை, பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும் வரை.திரிபுராவில் நீண்ட காலங்களாக கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்தாலும் திரைமறைவில் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான சங்பரிவார கும்பல்கள் கிட்டத்தட்ட கால்நூற்றாண்டுகளாக தங்களின் பல அரசு சாரா தன்னார்வ அமைப்புகளைக்(NGO) கொண்டு மக்கள் சேவைப் பணிகள் செய்கிறோம் என தங்களை ஆழமாக நிலைநிறுத்திக் கொண்டார்கள்.பழங்குடி மக்கள் அனைவரையும் ஹிந்து மக்களாக தகவமைக்கும் பணிகளை சங்பரிவாரம் அங்கே நேர்த்தியாக செய்திருக்கிறது.அதன் விளைவுகள்தான் தேர்தலில் கம்யூனிஸ்ட்டுகள் தோற்றதும் தன்னுடைய சொந்தக் கோட்டையில் கம்யூனிஸ்ட்டுகள் மிகப்பெரும் வன்முறையை சங்பரிவார கும்பல்களிடமிருந்து எதிர்கொண்டார்கள்.லெனின் சிலை உடைக்கப்பட்டது.கம்யூனிஸ்ட்டு அலுவலகங்கள் சூறையாடப்பட்டன.தொடர் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன.

வழக்கம் போல பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தவுடன் தங்களை அரசியல் ரீதியாக வளர்த்திக் கொள்ள சிறுபான்மை மக்களை பொது எதிரியாக காட்டி பொதுச் சமூகத்தில் பிளவுகளையும்,வெறுப்பையும் ஏற்படுத்துவது வழக்கம்.அதுதான் தற்போது திரிபுராவிலும் இஸ்லாமியர்களுக்கெதிரான வன்முறையாக,கலவரங்களாக வெடித்திருக்கிறது.அண்டைநாடான வங்காளதேசத்தில் துர்கா பூஜையின் போது நடந்த விரும்பத்தகாத சில செயல்களினால் அங்கு சிறுபான்மை சமூகமான இந்து மக்களுக்கெதிராக கலவரம் ஏற்பட்டது.ஏழு பேர் கொல்லப்பட்டு கோயில்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது.வீடுகள் இடிக்கப்படிருக்கின்றன.இதை இந்தியாவில் யாருமே ஆதரிக்கவில்லை.

விஷ்வ ஹிந்து பரிசத்(VHP)

இதைக் காரணமாக வைத்து, நாங்கள் இதைக் கண்டிக்கின்றோம் என்ற சங்பரிவார்களின் ரவுடி கும்பல்களில் ஒன்றான விஷ்வ ஹிந்து பரிசத்(VHP) ஒரு பேரணியை திட்டமிடுகிறது.அந்தப் பேரணியில் கிட்டத்தட்ட 3500க்கும் மேற்பட்ட பஜ்ரங் தளம் உள்ளிட்ட ஹிந்துத்துவாவினர் ஒன்று கூடுகிறார்கள்.இத்தனைக்கும் ஹிந்து மக்களுக்கெதிரான அந்த கலவரத்தை வங்கதேச அரசு ஒரே நாளில் அடக்கி விட்டது.கலவரம் செய்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.பாதிக்கப்பட்ட மக்களுடன் நாங்கள் இருக்கிறோம் என வங்கதேச முஸ்லீம்கள் குரல் கொடுக்கிறார்கள்.போலவே,திரிபுராவிலோ, இந்தியாவின் வேறு பகுதிகளிலோ எந்த முஸ்லிம்களும் அந்த கலவரத்தை ஆதரிக்கவும் இல்லை.

ஆனால், VHP நடத்திய அந்தப் பேரணி செல்லும் இடங்களில் எல்லாம் இஸ்லாமிய மக்களுக்கெதிராவும், இறைத்தூதர் முஹம்மது நபிக்கெதிராகவும் மோசமான கோஷங்களையும்,வெறுப்பு வார்த்தைகளையும் முழக்கமிட்டுச் சென்றிருக்கிறார்கள்.அதன் காரணமாக பள்ளிவாசல்கள்,மதரஸாக்கள், முஸ்லிம்களின் குடியிருப்புகள், அவர்களின் வணிக நிறுவனங்கள் என குறி வைத்து (குஜராத் மாடல்) அழிக்கப்பட்டிருக்கின்றன.பெண்களை மானபங்கப்படுத்துவது, சொத்துக்களை சூறையாடுவது என தொடர்ந்து சில முஸ்லிம் மக்களின் உயிர்களையும் பறித்திருக்கிறார்கள்.வழக்கம் போல ஊடகங்களும், ஆளும்அரசும், காவல்துறை உள்ளிட்ட அரசு நிர்வாகங்களும் கலவரக்காரர்களான ஹிந்துத்துவ குண்டர்களை அடக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவரைதிரிபுரா மாநிலத்தில் மத ரீதியிலான மோதல்களோ, வன்முறைகளோ ஏற்பட்டதில்லை.பாரதிய ஜனதா ஆட்சியில் அமர்ந்தவுடன்தான் மத அடிப்படையிலான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.எதிர்க்கட்சிகள் என்பவைகள் கூட அமைதியாகவே இருக்கின்றன.

உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் RSS தலைமையிலான பாசிச பாஜக ஆட்சி ஏற்பட்டதிலிருந்து சிறுபான்மை மக்களான முஸ்லிம்களுக்கெதிரான பிரச்சினைகள், நெருக்கடிகள் என விவகாரங்கள் முற்றுகின்றன.தினமும் பிரச்சினைகள் நடக்காத நாளே இல்லை என்னும் அளவிற்கு முஸ்லிம்கள் பாதிக்கப்படுகிறார்கள்.இந்த தேசத்தில் வீழ்த்தப்பட வேண்டியவர்கள் சங்பரிவார பாசிச கும்பல்கள்.அப்படி வீழ்த்தும் பொழுதுதான் நமது நாடு ஒரு ஜனநாயக மக்களாட்சி நாடாக திரும்பும். அதற்கு நிறைய விலை இந்த நாட்டு மக்கள் கொடுக்க வேண்டி இருக்கும். காலச் சூழ்நிலைகள் எப்பொழுது ஒரேபோல் இருப்பதில்லை.வைதீக பிராமணிய மதத்தின் கோரப்பிடியிலிருந்து மக்களை பாதுகாத்து இந்திய தேசத்தை ஆட்சி செய்த சமூகமான இஸ்லாமிய சமூகம் தற்போது நெருக்கடிக்குள்ளாகி இருக்கின்றது எந்தளவு உண்மையோ, அதேபோல அவர்களுக்கும் ஒரு காலம் வரும்.ஏனெனில் உலக வரலாறுகளில் அதற்கு நிறைய சான்றுகளும், படிப்பினைகளும் உள்ளன.

Comments

Popular posts from this blog

இஸ்லாம் கற்றுத் தரும் பேச்சு நாகரீகம்!!

வஸதிய்யா

ஹஜ்.