Posts

ஊடகம் என்னும் ஆயுதம்

Image
ஊடக பயங்கரவாதம்!! இந்தியாவில் பத்திரிக்கைத் துறையை மூன்று வகையாகப் பிரித்து பார்க்க வேண்டி உள்ளது.முதலாவதாக சுதந்திரத்திற்கு முன் பத்திரிக்கைகளை ஆரம்பித்தவர்கள்.இதில் பத்திரிக்கையை தொடங்கியவர்கள்,அங்கு பணியாற்றியவர்கள் என பெரும்பாலானவர்கள் சமூகப் போராளிகள்,அறிவாளிகள்,துணிச்சல் மிக்கவர்கள்,பல்மொழித் திறன் பெற்றவர்கள்,தங்களின் கொள்கைகளுக்காக சிறை சென்றவர்கள்,லட்சியம் மற்றும் கொள்கைகளுக்காக தங்களின் சொந்த வாழ்க்கை மற்றும் உயிரையும் துறந்தவர்கள். இரண்டாவதாக, நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பத்திரிக்கை தொடங்கியவர்கள்.பணக்காரர்கள்.பத்திரிகை துறையில் முதலீடு செய்வதின் வழியாக லாபம் ஈட்ட வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டவர்கள்.குறைந்தபட்ச தொழில் தர்மத்தையும்,பத்திரிக்கை மரபு மற்றும் தர்மத்தையும் கடைபிடித்து லாப நோக்கோடு பத்திரிக்கையை நடத்தியவர்கள்.இவர்களில் பலர் சமூக அக்கறையுடனும் சில போது அதிகார மையங்களிடம் அடிபணியாதவர்களாகவும் இருந்தனர். மூன்றாவது தரப்பினர் உலகமயமாக்கல் மற்றும் தாராள,தனியார் மயமாக்கலுக்குப் பிறகு தொடங்கப்பட்ட காட்சி ஊடகங்கள்.இவர்கள் பணத்தை மட்டுமே பிரதான நோக்கமாக கொண்

மறுமலர்ச்சி...

Image
மறுமலர்ச்சிக்கான வழி மனித விடுதலைதான் மதங்களின் லட்சியம்.இஸ்லாம் இந்த லட்சியத்தை அடைந்ததற்கு காரணம் அதன் பொருள் அமைதி என்பதால்தான் என்று யாரும் நம்ப மாட்டார்கள்.சிலரை ஒன்று திரட்டி அந்த கூட்டமைப்பிற்கு அமைதி என்று பெயரிட்டால் சாந்தி உருவாகிவிடுமா? அவ்வாறெனில் சுதந்திரம், சமத்துவம், நீதி ஆகியவற்றை மனிதர்கள் எளிதாக அடைந்து இருப்பார்கள். ஆன்மீக, சமூக, பொருளாதார, அரசியல் துறைகளில் ஆதிக்கம் செலுத்திய சுரண்டல் சக்திகளோடு போராட்டம் நடத்தியே அமைதி என்ற பொருளை இஸ்லாம் நிதர்சனம் ஆக்கியது. சிலை வணக்கத்திற்கு எதிராக நபி ஸல்லல்லாஹு அவர்கள் நேரடியாக பிரசாரம் செய்தபோது அமைதியா அங்கு ஏற்பட்டது? பூர்வீக மதம், பரம்பரை சடங்குகள் குறித்து கேள்வி எழுப்பப்படும் போது யார் தாம் எதிர்க்க மாட்டார்கள்? எதிர்ப்பும், தர்க்கங்களும், தாக்குதல்களும் இயல்பாகவே ஏற்பட்டது. வெளியேற்றுதல், தனிமைப்படுத்துதல், பரிகாசம், புறக்கணிப்பு, தடை, சித்திரவதை, கொலை முயற்சி, புலம்பெயர்வு, இந்தக் கொடுமைகள் எல்லாம் பல ஆண்டுகள் நீடித்தன. பின்னர் போர். அதுவும் ஒன்றல்ல பல போர்கள் நடைபெற்றன. இஸ்லாம் துவங்கிய இடத்தில் அமைதி ஏற்பட

இஸ்லாமோஃபோபியா(Islamophobia)

Image
இஸ்லாமிய வெறுப்புத் தொழில் அல்லது இஸ்லாமோஃபோபியா... இஸ்லாமோஃபோபியா எனும் பெயர் புதிதாக புனையப்பட்டது 1990-ன் மத்தியில் தான். உலகின் பல்வேறு பண்பாடு மற்றும் பன்முகத்துவம் அமைந்த சூழல்களில் தோன்றியதே இந்த சொல்லாடல்.  ஃபோபியா(Phobia) என்ற கிரேக்க சொல்லுக்கு “திகில் அல்லது பெரும் அச்சம் கொள்ளல்” எனத் தமிழாக்கம் செய்யலாம். இஸ்லாமோஃபோபியா எனும் வார்த்தைப் பிரயோகத்தை கட்டமைக்க அடிப்படையாகக் கொள்ளும் Xenophobia எனும் வார்த்தைக்கு “புதிய அறிமுகத்தைக் கண்ட அதீத பயம்” அல்லது “புதியவர்களைக் கண்டவுடன் எழும் திகில்” என்று அர்த்தம். ஒரு விவகாரத்தில் அதீத பயம் தோன்ற அந்த விடயம் குறித்த முழுமையான அறிவு இல்லாமல் இருப்பதும்,அதனைக் குறித்த தவறான கற்பிதங்களும்,வழிகாட்டல்களும்தான் பிரதான காரணங்களாக அமைய முடியும்.அதோடு தான் பின்பற்றும் கொள்கையை சரி காண்பதற்காக பிற கொள்கைகள் குறித்த மோசமான சிந்தனை ஓட்டங்களும் காரணமாக இருக்கிறது.அந்த வகையில் இஸ்லாமோஃபோபியாவையும் குறிப்பிடலாம். இஸ்லாமோஃபோபியா என்பது ஏதோ புதிதாய்த் தோற்றுவிக்கப்பட்ட நவநாகரீக வார்த்தைப் பிரயோகம் போல் தோன்றினாலும், அதன் க

இஸ்லாத்தில் பிரார்த்தனைகள்..

Image
இஸ்லாமும் பிரார்த்தனைகளும் பிரார்த்தனை(துஆ) இஸ்லாமிய பண்பாட்டின் முக்கியமான ஓர் அங்கமாகும்.நாம் இறைவனை அடிபணிவதில் ஓர் பரிபூரண நிலையை நோக்கி உயர வேண்டும் என விரும்பினால்,நாம் நம்முடைய இறைவனைக் குறித்து சரியாக அறிந்து கொள்ள வேண்டும்.அவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை முற்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.அத்துடன் மனத்தூய்மையையும்,ஒழுக்க மாண்பையும் கொண்டிருக்க வேண்டும்.இவற்றை நாம் உணர்ந்து கொள்வதற்கு பிரார்த்தனை நமக்கு பேருதவி செய்கிறது. இஸ்லாமிய மார்க்கத்தின் முக்கிய கடமையான தொழுகையே பிரார்த்தனைதான்.அல்குர்ஆனின் முதல் அத்தியாயமான " சூரா பாத்திஹா " பிரார்த்தனைகளின் முழு வடிவமாக திகழ்கிறது. இஸ்லாம் பிரார்த்தனை  என்பதை ஒரு மனிதனின் அன்றாட வாழ்வியல் தொகுப்புடனேயே இணைத்து வைத்திருக்கிறது.மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை,இன்பமான நேரங்களிலும்,துன்பமான தருணங்களிலும்,வாழ்க்கையின் சோதனையான,நெருக்கடியான தருணங்கள் என வாழ்வின் அனைத்துப் பகுதிகளோடும் மனிதனை பிரார்த்தனையோடே பயணிக்குமாறு இஸ்லாம் கட்டமைத்திருக்கிறது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தன்னுடைய வாழ்க்கையின் அனைத்துச் ச

இஸ்லாமிய அடையாளங்களின் தனித்தன்மைகள்.

Image
மஸ்ஜித் (பள்ளிவாசல்கள்).. மாநபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றபொழுது கூஃபா என்ற இடத்தில் தங்கினார்கள்.அங்கே அவர்கள் செய்த முதல் பணி ஒரு மஸ்ஜிதை எழுப்பியதுதான். ஏனெனில் ஒரு முஸ்லிமுக்கு அடையாளம் என்பதே மஸ்ஜிதுதான். தன்னைத் தாழ்மைப்படுத்தி, படைத்த இறைவனிடம் மண்டியிட்டு, ஸஜ்தா செய்வதற்காக பூமியில் புனிதமாக உருவாக்கப்படுவதுதான் மஸ்ஜித். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  “அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறவர்கள் மஸ்ஜித்களை வளமாக்குவார்கள்.”  (திர்மிதி) இங்கே வளப்படுத்துதல் என்பது பிரம்மாண்டமாக,நவீன அலங்காரங்களுடன் மிக உயர்வாக பள்ளிவாசல்கள் கட்டப்படுவதல்ல.மாறாக,இருக்கும் பள்ளிவாசல்களில் மனிதர்கள் தங்கள் இறைவனை வழிப்பட்டு  வணக்கங்களின் வழியாக இறைவனும் தூதரும் காட்டித் தந்த செயல்களை நிறைவேற்றுதல் என்பதே மஸ்ஜிதுகளை வளமாக்குவார்கள் என்ற கூற்றாகும். நிச்சயமாக, மஸ்ஜித் வெறும் ஒரு கட்டடம் மட்டுமல்ல. அது அல்லாஹ்வை நினைவுகூர்வதற்கான அடையாளச் சின்னம்! நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  “மஸ்ஜிதை நேசிப்பவர்களை அல்லாஹ் நேசிக்கிறான்.”  (அபு சஈத் (ரலி), தப்ரானீ) இஸ்ல

மனித குலத்தின் வழிகாட்டி, முன்மாதிரி.....

Image
மனித குலத்தின் தலைவர், அழகிய முன்மாதிரி. "மிகச் சிறந்த தத்துவக் கோட்பாடோ,உயர்ந்த கல்வியோ உங்களுக்கு ஒரு போதும் நேர்வழியை நல்காது.வெற்றியையும் பெற்றுத் தராது.நேர்வழியையும்,வெற்றியையும் தரவேண்டும் என்றால் அந்த கோட்பாடுகளுக்குப் பின்னணியில் ஓர் ஆளுமை அடித்தளமாக அமைந்து செயல்பட்டிருக்க வேண்டும்.அப்பொழுதுதான் அதன்பால் நம்முடைய கவனம்,பார்வை,நேசம்,பாசம் போன்றவை குவியும்" உங்களுக்கெல்லாம் அந்த மாதிரியான ஆளுமை யார் என்றுதெரியுமா??? அவர்தான்  முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம். " அண்ணலார் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை ஒரு முஸ்லீமுக்கு முழுமையான முன்மாதிரி என்கிறது இஸ்லாம்.அப்படியானால் அவரது வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளும் அனைவருக்கும் தெரிந்தாக வேண்டும்.அனைவருக்கும் முன்பாகவும் அவரது வாழ்க்கை திறந்தே வைக்கப்பட்டுள்ளது.அவரது வாழ்க்கையின் எந்தவொரு பகுதியும் மறைவாகவோ மூடி மறைந்தோ இல்லை.ஒரு நிகழ்வு கூட விடுபடவில்லை.நிகழ்ந்தன யாவும் வரலாற்றின் பக்கங்களில் உள்ளன.ஒருவரது வாழ்க்கை முழுமையாக குற்றங் குறைகள் அற்றதாக,மாசற்றதாக உள்ளது என்பதை அறிய இதுவொன்றுதான் ஒற்றை வழிமுற

இந்திய முஸ்லிம்கள்......

Image
இஸ்லாம் கொள்கை இலக்கு இயக்கம்!! இந்திய தேசத்தில் இஸ்லாமிய மார்க்கத்தை கொள்கையாக ஏற்றுக் கொண்ட மக்கள் கிட்டத்தட்ட 25 கோடிக்கும் அதிகமாக வாழ்கிறார்கள்.இந்தியாவின் இரண்டாவது பெரிய மக்கள் திரள் முஸ்லிம்கள். இந்திய சுதந்திரத்திற்கு பின்னரான காலகட்டத்தில் அரசின் அனைத்து துறை ரீதியாகவும் புறக்கணிக்கப்படும் சமூகமாக இஸ்லாமிய சமூகம் உள்ளது.குறிப்பாக 1990களின் காலகட்டங்களுக்குப் பிறகு உலகமயமாக்கலும்,தனியார்மயமாக்கலும் தாராளமாக இங்கே அனுமதிக்கப்பட்ட சமயத்தில் சுதந்திரத்திற்கு முன்பும் பின்புமாக இஸ்லாமிய சமூகத்தை அச்சுறுத்தும்  ஹிந்துத்துவப் பாசிசம் தனது புதிய உச்சத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.இத்தகைய சூழலில் இந்தச் சமூகத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு அமைக்கப்பட்ட நீதிபதி சச்சார் கமிட்டியின் அறிக்கை வெளிவந்தது. அந்த அறிக்கையில் சச்சார் அவர்கள் இஸ்லாமிய சமூகத்தை மேம்படுத்த மூன்று பிரதான விடயங்களில் கவனம் செலுத்துமாறு அரசுக்கு பரிந்துரை செய்தார்.அவை  1.இஸ்லாமிய சமூகத்தின் அடையாளங்களை(Identity) பாதுகாக்க வேண்டும். 2.இஸ்லாமிய மக்களுக்கு பாரபட்சம் காட்டாமல் அனைத்து ரீதியா