Posts

திருக்குர்ஆனை அறிவோம்!!

திருக்குர்ஆனை அறிவோம்!! வேதங்கள் என கூறப்படுபவை உலகிலுள்ள அனைத்து மதங்களும் தங்களுக்கு ஒரு வேதத்தைக் கொண்டுள்ளன. இந்து மதம் ரிக், யஜுர், சாம, அதர்வணம், பகவத்கீதை. மனுஸ்மிரிதி போன்றவைகளையும், கிறிஸ்தவமதம் பைபிளையும் சீக்கிய மதம் குரு கிரந்தத்தையும் தங்கள் வேதங்களாக கூறுகின்றன. குர்ஆன் உலகத்தில் வாழும் ஒட்டு மொத்த மனித சமுதாயத்துக்கு அருளப்பட்டிருந்தாலும் அது முஸ்லீம்களுக்கு மாத்திரம் வேத நூல் என்று பிற மதத்தினர் கருதும் நிலையும் குர்ஆன் எங்களுடைய வேத நூல் அது முஸ்லீம்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்று சில முஸ்லீம்களும் கூறும் நிலையையும் இன்று நாம் காண்கிறோம். ஒப்பீடு பிற மதங்களின் வேதங்களுடன் குர்ஆனை ஒப்பிட்டு நோக்கும் போது நாம் அறியும் சில விஷயங்கள்: 1. குர்ஆனை யாரும் படித்துப் பயன் பெறலாம். 2. ஒரு சாரார் மட்டுமே வேதத்தைக் கற்றுப் பயன்பெற முடியும் என்ற தடை இஸ்லாத்தில் இல்லை. 3. எல்லாத்துறைகளிலும் எல்லா நேரங்களிலும் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு குர்ஆனில் உண்டு, இது பிற வேதநூல்களில் இல்லாத தனிச்சிறப்பு. 4. குடும்பத்தாருடன் இருந்து குர்ஆனை ஓதி பயன் பெறலாம். நேர்வழி அடையலாம்.

வட்டி ஒரு இஸ்லாமியப் பார்வை.

வட்டி ஒரு சமூகக் கொடுமை! வட்டி… வட்டி… வட்டி… தமிழில் ஒரு பிரபலமான கூற்று உண்டு! அட்டிகை செய்வதற்கு வட்டிக்கு வாங்கினேன். வட்டியைக் கட்ட முடியாமல் அட்டிகையை விற்று வட்டியைக் கட்டினேன். – பழமொழி. அட்டிகையை விற்றும் வட்டிக் கணக்கு முடியாமல் புட்டி விஷத்தில் மொத்தக் கணக்கையும் முடித்துக் கொண்டவர்கள் இன்று எத்தனையோ பேர்.  உன் அப்பன் செத்தால் என்ன ? நீ வட்டியைக் கட்டு, உன் கணவன் செத்தால் என்ன ? நீ வட்டியைக் கட்டு என்று கல்நெஞ்சர்கள் மனைவிப் பிள்ளைகளை விரட்டுவார்கள் என்பதால் அவர்கள் வாயிலும் விஷத்தை ஊற்றி என்னுடன் அழைத்துச் சென்று விட்டேன் என்று வட்டிக்கடன் அடைக்க முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டவர்களின் காலுக்கடியில் இருக்கும் கடிதத்தில் மேற்காணும் விதம் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறோம்.  வாழ்ந்து கெட்டவர்கள் என்று சொல்வதுண்டு, வட்டியால் அழிந்து கெட்டவர்களே அதிகம்.  இன்னும் வட்டிக் கொடுமையால் பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு அதன் அதிபர்கள் எஸ்கேப், அல்லது தற்கொலை.  இன்னும் வட்டிக் கொடுமையால் சின்னஞ்சிறு நாடுகள் கடன் பெற்ற நாடுகளின் (திரைமறைவில்) காலன

வஸதிய்யா

மனித குலத்திற்கு வழிகாட்டியாய் அமையும் வஸதிய்யா எனும் நடுநிலை கலாநிதி யூசுப் அல் கர்ளாவி அவர்களது சில மேற்கோள்களைத் தொகுத்து நோக்கிய போது… கலாநிதி யூசுப் அல் கர்ளாவி அவர்கள்,  வஸதிய்யா எனும் இஸ்லாத்தின் நடுநிலை குறித்து ஆழ்ந்து பேசியவர்களில் முக்கியமானவர். வஸதிய்யாவின் ஆழ அகலங்களை ஆதாரபூர்வமாய் வெளிக் கொண்டு வந்ததில் அவரது பங்கு மகத்தானது. வஸதிய்யா குறித்து அவர் பேசிய பரிமாணங்களில் வஸதிய்யா என்பது ஒரு மனித குலத் தேவை என்பது மிக முக்கியமான ஒரு பகுதி. அதாவது பக்கம் சாராத,  நீதியான,  இலக்கு நோக்கிய,  இஸ்தீரமான ஒரு வாழ்வு முறை மனித இனத்தின் அத்தியவசியத் தேவைகளில் ஒன்று. அந்த வாழ்வு முறையைத்தான் அல்குர்ஆன் மனிதர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறது. “ஹுதன் லின்னாஸ்”மனிதர்களுக்கான வழிகாட்டி என அல்குர்ஆன் தன்னை அறிமுகப்படுத்தியது இந்தப் பின்புலத்தினாலாகும். இந்த வாழ்வு முறையை,  மனித இனத்திற்கு அறிமுகப்படுத்தும் பொறுப்பு முஸ்லிம்களிடம் இருக்கின்றது. அதனையே அல்குர்ஆன் இவ்வாறு கூறியது “நீங்கள் மக்களுக்கு சாட்சியாளர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக” (பகரா 143 ) என்கிறது. இந்த இடத்தில் கலாந